செய்திகள்

கூடுதல் சர்வதேச ஆட்டங்கள் தேவை: ரஷித் கான் கோரிக்கை

ஆப்கானிஸ்தான் அணி கூடுதலான சர்வதேச ஆட்டங்களில் விளையாட வேண்டும் என்று பிரபல கிரிக்கெட் வீரர் ரஷித் கான் கோரிக்கை விடுத்துள்ளார்

DIN

ஆப்கானிஸ்தான் அணி கூடுதலான சர்வதேச ஆட்டங்களில் விளையாட வேண்டும் என்று பிரபல கிரிக்கெட் வீரர் ரஷித் கான் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஆசியக் கோப்பையின் முதல் ஆட்டத்தில் யாரும் எதிர்பாராதவிதமாக இலங்கையை வீழ்த்தியது ஆப்கானிஸ்தான். முதலில் பேட்டிங் செய்த இலங்கை 105 ரன்களுக்குச் சுருண்டது. அதைவிடவும் இந்த இலக்கை 10.1 ஓவர்களில் எட்டியது ஆப்கானிஸ்தான். இன்று தனது 2-வது ஆட்டத்தில் வங்கதேசத்தை எதிர்கொள்கிறது ஆப்கானிஸ்தான். 

2023-27 கிரிக்கெட் அட்டவணையில் ஆப்கானிஸ்தான் அணி 21 டெஸ்டுகள், 45 ஒருநாள், 57 டி20 ஆட்டங்களில் விளையாடுகிறது. ஒட்டுமொத்தமாக 123 சர்வதேச ஆட்டங்கள். 2018-ல் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு அறிமுகமான ஆப்கானிஸ்தான் அணி இதுவரை 6 டெஸ்டுகளில் மட்டுமே விளையாடியுள்ளது. ஆனால் 2023 முதல் அடுத்த 4 வருடங்களில் 21 டெஸ்டுகளை விளையாடவுள்ளது. 

இந்நிலையில் பிரபல ஆப்கானிஸ்தான் வீரர் ரஷித் கான் கூறியதாவது:

முன்பை விடவும் நிறைய இளைஞர்கள் அணியில் உள்ளார்கள். டி20 கிரிக்கெட்டில் விளையாடுவதில் ஆர்வமாக உள்ளார்கள். நிறைய டெஸ்ட் கிரிக்கெட்டுகளில் நாங்கள் விளையாடுவதில்லை. இது எங்கள் கையில் இல்லை. நாங்கள் அதிக அளவிலான சர்வதேச ஆட்டங்களில் விளையாட விருப்பமாக இருக்கிறோம். இதன்மூலம் எந்தளவுக்குத் திறமையை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்பதை இளம் வீரர்கள் அறிந்து கொள்வார்கள். நாங்கள் பல டி20 லீக் போட்டிகளில் விளையாடுவதால் சிறந்த வீரர்களிடமிருந்து பல விஷயங்களைக் கற்றுக்கொள்கிறோம். அந்த அனுபவத்தைச் சர்வதேச ஆட்டங்களில் வெளிப்படுத்துகிறோம். இதர வீரர்களுக்கும் இதைப் பகிர்கிறோம். நாங்கள் டி20 லீக் போட்டிகளில் அதிக அளவில் விளையாடுவது பேட்டர்களுக்குக் கூடுதல் உதவியாக இருக்கும். சர்வதேச ஆட்டம் இருந்தால் அதற்குத்தான் முன்னுரிமை அளிக்க வேண்டும். எதிர்காலத்தில் ஏராளமான சர்வதேச ஆட்டங்களில் விளையாடுவோம் என நம்புகிறேன் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருங்குயில்... திவ்யா துரைசாமி!

மகளிர் உலகக் கோப்பை தோல்வி எதிரொலி! பாகிஸ்தான் அணி தலைமைப் பயிற்சியாளர் நீக்கம்!

பிலிப்பின்ஸில் ‘கேல்மெகி புயல்’ கோரத்தாண்டவம்: 26 பேர் உயிரிழப்பு!

சத்தீஸ்கரில் 2 ரயில்கள் மோதி விபத்து: 4 பேர் பலி

”என்னைக் கொலைசெய்ய அன்புமணி 15 பேர் அனுப்பியுள்ளார்” அருள் பரபரப்புப் பேட்டி

SCROLL FOR NEXT