முகப்பு
செய்திகள்

இஷான் கிஷன் அதிரடி இரட்டை சதம்: 200*

வங்கதேசத்திற்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் இஷான் கிஷன் அதிரடியாக இரட்டை சதம் அடித்துள்ளார்.

Updated On : 10 டிசம்பர், 2022 at 3:52 PM
பகிர்:
Updated On : 6 பிப்ரவரி, 2024 at 6:21 PM

இந்தியா - வங்கதேசம் அணிகள் மோதும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் ஆட்டம் சனிக்கிழமை காலை 11.30 மணிக்குத் தொடங்கியது.

3வது போட்டியில் வங்கதேசம் அணி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. கே.எல்.ராகுல் தலைமையில் இந்திய அணி கலமிறங்கியது. இஷான் கிஷன், குல்தீப் அணியில் இடம்பெற்றுள்ளனர். ரோஹித் காயம் காரணமாக இடம்பெறவில்லை. ஏற்கனவே வங்கதேசம் இந்த தொடரில் 2-0 என முன்னிலை வகிப்பது குறிப்பிடத்தக்கது.

ஷிகர் தவான் 3 ரன்னில் ஆட்டமிழந்தாலும் இஷான் கிஷன் அதிரடியாக விளையாட தொடங்கினார்.

Advertisement

31.3 வது ஓவரில் விராட் கோலி இஷான் கிஷன் ஜோடி பார்ட்னர்ஷிப் அமைத்து 250 ரன்களை கடந்துள்ளது. 35 ஓவர் முடிவில் இந்திய அணி 295 ரன்களுக்கு 1 விக்கெட். இஷான் கிஷன் 200 ரன்கள், விராட் கோலி 80 ரன்களுடனும் களத்தில் இருக்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.