செய்திகள்

இந்தியா - ஆஸ்திரேலியா மகளிர் டி20 தொடர்: பெண்களுக்கு இலவச அனுமதி!

இந்தியா - ஆஸ்திரேலியா மகளிர் அணிகள் மோதும் டி20 தொடரில் அனைத்து ஆட்டங்களுக்கும் பெண்களுக்கு இலவச அனுமதி...

DIN


இந்தியா - ஆஸ்திரேலியா மகளிர் அணிகள் மோதும் டி20 தொடரில் அனைத்து ஆட்டங்களுக்கும் பெண்களுக்கு இலவச அனுமதி அளிக்கப்படுவதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.

இந்தியா - ஆஸ்திரேலியா மகளிர் அணிகள் 5 டி20 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்கின்றன. நவி மும்பையில் நடைபெற்ற 2-வது டி20 ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவைத் தோற்கடித்தது இந்திய மகளிர் அணி. முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி, 20 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 187 ரன்கள் எடுத்தது. பெத் மூனி, டஹிலா மெக்ராத் ஆட்டமிழக்காமல் முறையே 82, 70 ரன்கள் எடுத்தார்கள். இந்தக் கடினமான இலக்கை நன்கு விரட்டிய இந்திய மகளிர் அணி, 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 187 ரன்கள் எடுத்து ஆட்டத்தை டை செய்தது. இதன்பிறகு நடைபெற்ற சூப்பர் ஓவரில் இந்திய அணி வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 1 ஓவரில் 1 விக்கெட் இழப்புக்கு 20 ரன்கள் எடுத்தது. ஆஸ்திரேலிய அணி, 1 விக்கெட் இழப்புக்கு 16 ரன்கள் எடுத்துத் தோற்றது. டி20 தொடர் 1-1 என சமநிலையில் உள்ளது.

ஞாயிறன்று நடைபெற்ற 2-வது டி20 ஆட்டத்துக்கு இலவச அனுமதி காரணமாகக் கிட்டத்தட்ட 45,000 ரசிகர்கள் வருகை தந்தார்கள். இந்தியாவில் இரு நாடுகளுக்கு இடையிலான மகளிர் கிரிக்கெட்டுக்கு இவ்வளவு ரசிகர்கள் வருகை தந்தது இதுவே முதல்முறை.

இந்நிலையில் மும்பை பிரபோர்ன் மைதானத்தில் நடைபெறவுள்ள கடைசி 3 டி20 ஆட்டங்களிலும் பெண்களுக்கு இலவச அனுமதி அளிக்கப்படுவதாக பிசிசிஐ இன்று அறிவித்துள்ளது. 3-வது டி20 ஆட்டத்துக்கு மட்டும் ஆண்களுக்கு இலவச அனுமதி உண்டு. கடைசி இரு டி20 ஆட்டங்களிலும் ஆண்களுக்குச் சிறிய அளவிலான கட்டணம் வசூலிக்கப்படும் என பிசிசிஐ அறிவித்துள்ளது. 

3-வது டி20 ஆட்டம் நாளை நடைபெறவுள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வேலூா் மாவட்டத்தில் 15 துணை வட்டாட்சியா்கள் இடமாற்றம்

ஆடிப் பெருக்கு தினத்தில் பெண்கள் சிறப்பு பூஜை

இளைஞா்களுக்கு அதிகரித்துவரும் மாரடைப்பு அபாயம்! இதய நல மருத்துவா்கள் எச்சரிக்கை

கூத்தாநல்லூரில் ஆடிப்பெருக்கு

கூட்டுறவு முழுநேர பட்டயப் படிப்பில் சேர காலநீட்டிப்பு

SCROLL FOR NEXT