செய்திகள்

டெஸ்ட் தொடரை முழுமையாக வெல்ல இந்தியாவுக்கு 145 ரன்கள் இலக்கு!

DIN

இந்தியாவுக்கு எதிரான 2-வது மற்றும் கடைசி டெஸ்டில் வங்கதேச அணி 2-வது இன்னிங்ஸில் 231 ரன்களுக்கு ஆட்டமிழந்துள்ளது. இதனால் இந்திய அணி டெஸ்ட் தொடரை 2-0 என முழுமையாக வெல்ல 145 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்டை 188 ரன்கள் வித்தியாசத்தில் வென்று டெஸ்ட் தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது இந்திய அணி. 2-வது மற்றும் கடைசி டெஸ்ட், மிர்பூரில் வியாழன் அன்று தொடங்கியது. டாஸ் வென்ற வங்கதேச கேப்டன் ஷகிப் அல் ஹசன், பேட்டிங்கைத் தேர்வு செய்தார். ஆடுகளத்தில் புற்கள் நிறைய இருந்ததால் சிராஜ், உமேஷ் யாதவ், உனாட்கட் என மூன்று வேகப்பந்து வீச்சாளர்களைத் தேர்வு செய்துள்ளது இந்திய அணி. இதனால் கடந்த ஆட்டத்தில் ஆட்ட நாயகனாகத் தேர்வான குல்தீப் யாதவ் இம்முறை நீக்கப்பட்டுள்ளார்.

வங்கதேச அணி முதல் இன்னிங்ஸில் 73.5 ஓவர்களில் 227 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. மொமினுல் ஹக் 84 ரன்கள் எடுத்தார். கடைசி 5 விக்கெட்டுகளை 14 ரன்களுக்கு வீழ்த்தியது இந்தியா. உமேஷ் யாதவ், அஸ்வின் தலா 4 விக்கெட்டுகளும் உனாட்கட் 2 விக்கெட்டுகளும் எடுத்தார்கள். இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 86.3 ஓவர்களில் 314 ரன்கள் எடுத்து முன்னிலை பெற்றது. ரிஷப் பந்த் 93, ஷ்ரேயஸ் ஐயர் 87 ரன்கள் எடுத்தார்கள். இருவரும் 159 ரன்கள் கூட்டணி அமைத்தார்கள். தைஜுல் இஸ்லாம், ஷகிப் அல் ஹசன் தலா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள்.

2-வது நாள் முடிவில் வங்கதேச அணி முதல் இன்னிங்ஸில் 6 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 7 ரன்கள் எடுத்தது. 

3-வது நாளான இன்று, முதல் பகுதியில் 4 விக்கெட்டுகளை இழந்தது வங்கதேசம். ஷான்டோ, மோனினுல் ஹக் தலா 5 ரன்களுக்கும் கேப்டன் ஷகிப் அல் ஹசன் 13 ரன்களுக்கும் முஷ்ஃபிகுர் ரஹிம் 9 ரன்களுக்கும் ஆட்டமிழந்தார்கள். அஸ்வின், உனாட்கட், சிராஜ், அக்‌ஷர் தலா 1 விக்கெட்டை எடுத்தார்கள். 

3-வது நாள் மதிய உணவு இடைவேளையின்போது வங்கதேச அணி 2-வது இன்னிங்ஸில் 33 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 71 ரன்கள் எடுத்தது. 

உணவு இடைவேளைக்குப் பிறகு மேலும் 3 விக்கெட்டுகளை இழந்தது வங்கதேசம். அக்‌ஷர் இரு விக்கெட்டுகளையும் உமேஷ் யாதவ் 1 விக்கெட்டையும் எடுத்தார்கள். ஜாகிர் ஹசன் 51 ரன்கள் எடுத்து யாதவ் பந்தில் ஆட்டமிழந்தார். மெஹிதி, நுருல் ஹசன் விக்கெட்டுகளை அக்‌ஷர் படேல் வீழ்த்தினார். வங்கதேச அணி தேநீர் இடைவேளையின்போது 60 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 195 ரன்கள் எடுத்தது. லிட்டன் தாஸ் 58, டஸ்கின் அஹமது 15 ரன்களுடன் களத்தில் இருந்தார்கள். 

தேநீர் இடைவேளைக்குப் பிறகு வங்கதேச அணியின் கடைசி 3 விக்கெட்டுகளை விரைவாக எடுத்தது இந்தியா. வங்கதேச அணி 2-வது இன்னிங்ஸில் 70.2 ஓவர்களில் 231 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. லிட்டன் தாஸ் 73 ரன்களில் சிராஜ் பந்தில் போல்ட் ஆனார். தைஜுல் இஸ்லாமை 1 ரன்னில் வீழ்த்தினார் அஸ்வின். 4 ரன்கள் எடுத்த கலீத் அஹமது ரன் அவுட் ஆனார். டஸ்கின் அஹமது 31 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். அக்ஸர் படேல் 3 விக்கெட்டுகளும் அஸ்வின், சிராஜ் தலா 2 விக்கெட்டுகளும் எடுத்தார்கள்.

இந்திய அணி டெஸ்ட் தொடரை 2-0 என முழுமையாக வெல்ல 145 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

370-ஆவது பிரிவை மீட்டெடுக்க முடியாது: பிரதமா் மோடி திட்டவட்டம்

ஸ்வாதி மாலிவாலுக்கு எதிரான மோசடி வழக்கின் மூலம் பாஜக அவரை மிரட்டுகிறது: அமைச்சா் அதிஷி பேட்டி

மதுராந்தகம் அருகே சிறுக்கரணையில் பெருங்கற்கால கல் வட்டங்கள்!

சா்ச்சைக்குரிய ‘ரஷிய பாணி’ ஜாா்ஜியா மசோதா: ‘வீட்டோ’வை பயன்படுத்தி ரத்து செய்தாா் அதிபா்

கா்நாடகத்தில் இருந்து போதைப் பொருள்கள் கடத்தல்: ஒருவா் கைது

SCROLL FOR NEXT