செய்திகள்

15 ஐபிஎல் போட்டிகளிலும் இடம்பெற்ற ஒரே வெளிநாட்டு வீரர்

15 ஐபிஎல் போட்டிகளிலும் இடம்பெற்ற ஒரே வீரர் என்கிற பெருமையை மேற்கிந்தியத் தீவுகள் அணியைச் சேர்ந்த டுவைன் பிராவோ பெற்றுள்ளார்.

DIN

ஐபிஎல் போட்டி 2008-ல் தொடங்கியது. இதுவரை 14 போட்டிகள் நடைபெற்றுள்ளன.

கடந்த 14 போட்டிகளிலும் விளையாடிய வெளிநாட்டு வீரர்கள் நான்கு வீரர்கள்தாம்.

ஏபி டி வில்லியர்ஸ், கிறிஸ் கெயில், ஷான் மார்ஷ், டுவைன் பிராவோ.

இந்த நால்வரில் டி வில்லியர்ஸ், கெயில், ஷான் மார்ஷ் ஆகிய மூவரும் இந்த வருட ஐபிஎல் போட்டியில் விளையாடவில்லை. ஏலப் பட்டியலிலும் அவர்களின் பெயர் இல்லை.

இதனால் 15 ஐபிஎல் போட்டிகளிலும் இடம்பெற்ற ஒரே வீரர் என்கிற பெருமையை மேற்கிந்தியத் தீவுகள் அணியைச் சேர்ந்த டுவைன் பிராவோ பெற்றுள்ளார். இந்தமுறை ஏலப்பட்டியலில் பிராவோவின் பெயர் இடம்பெற்றுள்ளது. அடிப்படை விலை - ரூ. 2 கோடி. 

ஐபிஎல் போட்டியில் மும்பை, குஜராத், சென்னை ஆகிய அணிகளில் பிராவோ விளையாடியுள்ளார். ஏலத்தில் சிஎஸ்கே உள்பட பல அணிகள் பிராவோவைத் தேர்வு செய்ய ஆர்வம் காண்பிக்கும் எனத் தெரிகிறது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிக் பாஸ் 9: ப்ரஜின் வெளியேற திவ்யா கணேசன் காரணமா?

கருப்பு, துணிச்சல், அழகு...சாக்‌ஷி அகர்வால்!

காட்டுயானைகள் இடமாற்றம்: வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்க குழு!

கடும் சரிவில் முடிந்த பங்குச்சந்தை! ரூ. 7 லட்சம் கோடி இழப்பு!!

குழந்தை வேலாயுதசுவாமி கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

SCROLL FOR NEXT