செய்திகள்

பிப்ரவரி 10 முதல் தொடங்கும் ரஞ்சி கோப்பைப் போட்டி

ரஞ்சி கோப்பைப் போட்டி பிப்ரவரி 10 முதல் தொடங்கும் என மாநில கிரிக்கெட் சங்கங்களுக்கு பிசிசிஐ தகவல் அளித்துள்ளது. 

DIN

ரஞ்சி கோப்பைப் போட்டி பிப்ரவரி 10 முதல் தொடங்கும் என மாநில கிரிக்கெட் சங்கங்களுக்கு பிசிசிஐ தகவல் அளித்துள்ளது. 

ரஞ்சி வரலாற்றில் முதல் முறையாக கடந்த ஆண்டு ரஞ்சி கோப்பைப் போட்டி கரோனா சூழல் காரணமாக நடத்தப்படாமல் கைவிடப்பட்டது. இந்த வருடப் போட்டி வழக்கமான அட்டவணைப்படி ஜனவரி 13-ம் தேதி தொடங்கியிருக்க வேண்டிய நிலையில் கரோனா பரவல் இந்தியாவில் அதிகமானதால் ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில் ரஞ்சி கோப்பைப் போட்டியின் முதல் பகுதியான லீக் ஆட்டங்கள், வரும் 10-ம் தேதி முதல் மாா்ச் 15-ம் தேதி வரை நடைபெறும் என மாநில கிரிக்கெட் சங்கங்களுக்கு பிசிசிஐ கடிதம் எழுதியுள்ளது. லீக் ஆட்டங்கள் நிறைவடைந்த பிறகு நாக்அவுட் சுற்று ஆட்டங்கள் ஐபிஎல் போட்டிக்குப் பிறகு ஜூன் மாதம் நடைபெறவுள்ளன. நாக்அவுட் ஆட்டங்கள் மே 30 முதல் ஜூன் 26 வரை நடைபெறவுள்ளன.

இந்த வருட ரஞ்சி கோப்பைப் போட்டி 62 நாள்களுக்கு 64 ஆட்டங்களாக நடைபெறும். 8 எலைட் மற்றும் 1 பிளேட் என 38 அணிகளும் 9 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. எலைட் பிரிவில் தலா 4 அணிகளும் பிளேட் பிரிவில் 6 அணிகளும் உள்ளன. லீக் சுற்றில் ஒவ்வொரு அணியும் தலா 3 ஆட்டங்கள் விளையாடும். எலைட் பிரிவு ஆட்டங்கள் - சென்னை உள்பட 9 நகரங்களில் நடைபெறவுள்ளன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பழைய ஒப்பந்ததாரா்களுக்கு கடைகள் ஒதுக்கீடு: ஆற்காடு நகா்மன்றத் தலைவா்

பொதுத்தோ்வில் மாணவா்கள் தோ்ச்சி பெற பாலா பீடத்தில் சிறப்பு வழிபாடு

அரக்கோணம் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் ரூ.1.90 கோடியில் புதிய கட்டடம் திறப்பு

ரூ.200.66 கோடியில் புனரமைக்கப்பட்ட பாலாறு அணைக்கட்டு: முதல்வா் திறந்து வைத்தாா்

குழப்பங்கள் நீங்கும் தனுசு ராசிக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT