கோப்புப்படம் 
செய்திகள்

'தோனிக்கு நன்றி': 14 கோடிக்குத் தேர்வான தீபக் சஹார்

தன் மீது நம்பிக்கை வைத்ததற்காக மகேந்திர சிங் தோனிக்கும், சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகத்துக்கும் தீபக் சஹார் நன்றி தெரிவித்துள்ளார்.

DIN


தன் மீது நம்பிக்கை வைத்ததற்காக மகேந்திர சிங் தோனிக்கும், சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகத்துக்கும் தீபக் சஹார் நன்றி தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் மெகா ஏலம் பெங்களூருவில் நேற்று (சனிக்கிழமை) தொடங்கியது. முதல் நாள் ஏலத்தில் டுவைன் பிராவோ, ராபின் உத்தப்பா, அம்பதி ராயுடு மற்றும் தீபக் சஹார் உள்ளிட்டோரை சென்னை சூப்பர் கிங்ஸே மீண்டும் ஏலத்தில் எடுத்தது. இதில் தீபக் சஹார் ரூ. 14 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டார்.

இந்த நிலையில், தீபக் சஹார் பேசும் விடியோவை சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

அதில், "சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்குத் திரும்பியது உண்மையில் மகிழ்ச்சியளிக்கிறது. என் மீது நம்பிக்கை வைத்ததற்கு மகேந்திர சிங் தோனி மற்றும் அணி நிர்வாகத்துக்கு நன்றி. வேறு ஒரு ஐபிஎல் அணிக்காக விளையாடுவதை என்னால் நினைத்துக்கூட பார்க்க முடியாது. சென்னை சூப்பர் கிங்ஸுக்காக மட்டுமே நான் விளையாட விரும்புகிறேன்" என்றார் தீபக் சஹார்.

இரண்டாம் நாள் ஏலம் பகல் 12 மணிக்குத் தொடங்கவிருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சத்தீஸ்கரில் 2 ரயில்கள் மோதி விபத்து: 4 பேர் பலி

”என்னைக் கொலைசெய்ய அன்புமணி 15 பேர் அனுப்பியுள்ளார்” அருள் பரபரப்புப் பேட்டி

என் மேல் ஒளிரும் சூரியன்... பூஜிதா பொன்னாடா!

அன்னிய நிதி வெளியேற்றத்தால் சென்செக்ஸ் 519 புள்ளிகள் சரிவுடன் நிறைவு!

சரும அழகைக் கெடுக்கும் பானங்கள்! பளபளப்பான சருமத்திற்கு இதைச் செய்யுங்கள்!

SCROLL FOR NEXT