செய்திகள்

3-வது டி20 ஆட்டத்திலிருந்து ரிஷப் பந்த் விலகல்

DIN

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான 3-வது டி20 ஆட்டத்திலிருந்து பிரபல வீரர் ரிஷப் பந்த் விலகியுள்ளார்.

மேற்கிந்தியத் தீவுகள் அணி இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்து ஒருநாள், டி20 தொடர்களில் விளையாடுகிறது. ஒருநாள் தொடரை 3-0 என இந்திய அணி வென்றது. டி20 தொடரில் இதுவரை நடைபெற்ற இரு ஆட்டங்களிலும் வெற்றி பெற்று தொடரை வென்றுள்ளது. 2-வது டி20 ஆட்டத்தில் விராட் கோலி 52 ரன்கள் எடுத்து இந்திய அணியின் வெற்றிக்கு முக்கியப் பங்களித்தார். மே.இ. தீவுகளுக்கு எதிரான மீதமுள்ள ஒரு டி20 ஆட்டத்திலிருந்து விராட் கோலி விலகியுள்ளார். இதற்காக கரோனா பாதுகாப்பு வளையத்தை விட்டு இன்று காலை அவர் வெளியேறினார். இதையடுத்து அடுத்து நடைபெறவுள்ள இலங்கைக்கு எதிரான டி20 தொடரிலும் விராட் கோலி பங்கேற்க வாய்ப்பில்லை எனக் கூறப்படுகிறது. எனினும் அடுத்து நடைபெறவுள்ள 2 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் கோலி பங்கேற்கவுள்ளார். தனது 100-வது டெஸ்டை மொஹலியில் விளையாடுகிறார். 

விராட் கோலியை அடுத்து விக்கெட் கீப்பர் ரிஷப் பந்தும் மே.இ. தீவுகளுக்கு எதிரான 3-வது டி20 ஆட்டத்திலிருந்து விலகியுள்ளார். கோலி போல ரிஷப் பந்தும் இலங்கைக்கு எதிரான டி20 தொடரில் பங்கேற்காமல் டெஸ்ட் தொடரில் மட்டும் விளையாடுவார் எனத் தெரிகிறது. 2-வது டி20 ஆட்டத்தில் 28 பந்துகளில் 52 ரன்கள் எடுத்த ரிஷப் பந்த், ஆட்ட நாயகன் விருதை வென்றார். 

3-வது டி20 ஆட்டத்தில் கோலி, ரிஷப் பந்த் விளையாடாததால் இவ்விருவருக்குப் பதிலாக ருதுராஜ் கெயிக்வாட், ஷ்ரேயஸ் ஐயர் ஆகியோர் இந்திய அணியில் இடம்பெற வாய்ப்புண்டு. இஷான் கிஷன் விக்கெட் கீப்பராகச் செயல்படவுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓடும் பேருந்திலிருந்து இறங்கிய விவசாயி சக்கரத்தில் சிக்கி உயிரிழப்பு

தண்ணீரைத் தேடி வந்த யானை...

காந்திபுரம் பேருந்து நிலையத்தில் தனியாா் பேருந்து மோதி 5 போ் காயம்

மாநகராட்சிப் பள்ளிகளில் 91.97 சதவீதம் தோ்ச்சி: கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது தோ்ச்சி விகிதம் சரிவு

மூலனூா் பாரதி வித்யாலயா பள்ளியில் 8 மாணவா்கள் 100க்கு 100 மதிப்பெண்கள்

SCROLL FOR NEXT