இந்திய கேப்டன் மிதாலி ராஜ் (கோப்புப் படம்) 
செய்திகள்

இந்திய மகளிர் அணிக்கு எதிராக 20 ஓவர்களில் 191 ரன்கள் குவித்த நியூசிலாந்து

இத்தொடரில் சிறப்பாக விளையாடி வரும் அமீலியா கெர் இன்றைய ஆட்டத்தில் 33 பந்துகளில் 1 சிக்ஸர், 11 பவுண்டரிகளுடன் 68 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

DIN

இந்தியாவுக்கு எதிரான 4-வது ஒருநாள் ஆட்டத்தில் நியூசிலாந்து அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 191 ரன்கள் குவித்தது. 

நியூசிலாந்துக்குச் சுற்றுப்பயணம் செய்து ஒரு டி20, 5 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடுகிறது இந்திய மகளிர் அணி. டி20 ஆட்டத்தில் நியூசிலாந்து வெற்றி பெற்றது. முதல் ஒருநாள் ஆட்டத்தை 62 ரன்கள் வித்தியாசத்திலும் 3 விக்கெட் வித்தியாசத்தில் 2-வது ஒருநாள் ஆட்டத்தையும் வென்றது நியூசிலாந்து அணி. 3-வது ஒருநாள் ஆட்டத்தை மூன்று விக்கெட் வித்தியாசத்தில் வென்று ஒருநாள் தொடரைக் கைப்பற்றியது நியூசிலாந்து அணி. 

இந்நிலையில் 4-வது ஒருநாள் ஆட்டம் குயின்ஸ்டவுனில் இன்று நடைபெற்று வருகிறது. மழை காரணமாக ஆட்டம் 20 ஓவர்களாகக் குறைக்கப்பட்டன. டாஸ் வென்ற இந்திய அணி ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தது. இந்திய அணியில் மந்தனா இடம்பெற்றுள்ளார்.

இத்தொடரில் சிறப்பாக விளையாடி வரும் நியூசி. வீராங்கனை அமீலியா கெர் இன்றைய ஆட்டத்தில் 33 பந்துகளில் 1 சிக்ஸர், 11 பவுண்டரிகளுடன் 68 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். ஏமி 16 பந்துகளில் 32 ரன்கள் எடுத்தார். நியூசிலாந்து அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 191 ரன்கள் குவித்தது. 

நியூசிலாந்தின் வலுவான ஸ்கோரால் இந்திய அணி இந்த ஆட்டத்தை வெல்ல மிகவும் போராடவேண்டிய நிலைமையில் உள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சென்னை விமான நிலையத்தில் ரூ.20 கோடி போதைப் பொருள் பறிமுதல்

பாகிஸ்தானைத் தாக்கினால் செளதி களமிறங்கும்! உடன்பாடு கையொப்பம்!

நடிகர் ரோபோ சங்கர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி!

மும்பையில் பிரபல பள்ளியில் 4 வயது குழந்தைக்கு பாலியல் வன்கொடுமை: பெண் ஊழியர் கைது

போதைப்பொருள் கடத்தல் நாடுகள் பட்டியலில் இந்தியா! டிரம்ப் அறிவிப்பு!

SCROLL FOR NEXT