முகப்பு
செய்திகள்

இலங்கைக்கு எதிரான முதல் டி-20: 62 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி

இலங்கை அணிக்கு எதிரான டி-20 கிரிக்கெட் போட்டியில் 62 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:30 AM
62 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி
பகிர்:

இலங்கை அணிக்கு எதிரான டி-20 கிரிக்கெட் போட்டியில் 62 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது.

இந்தியா - இலங்கை கிரிக்கெட் அணிகளுக்கிடையிலான முதல்  20 ஓவர் போட்டி லக்னோவில் இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

இதில் முதலில் களமிறங்கிய ரோஹித் சர்மா, இஷான் கிஷன் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ரோஹித் 44 ரன்களுக்கு ஆட்டமிழக்க, இஷான் கிஷன், ஸ்ரேயாஸ் அய்யர் அதிரடியாக ஆடி அரை சதம் கடந்தனர். 

இறுதியில் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 199 ரன்களைச் சேர்த்தது. இதனைத் தொடர்ந்து 200 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை களமிறங்கியது.

இதில் முதலில் ஆடிய நிசங்கரா ரன்கள் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். கம்லி மிஸ்ரா (13),  ஜனித் லியங்கா (11) சொற்ப ரன்களை எடுத்து வெளியேறினர். அசலங்கா போராடி அரை சதம் (53) கடந்தார். அதன் பிறகு வந்த வீரர்களும் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர். 

இதனால் இலங்கை அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 137 ரன்களை மட்டுமே எடுத்தது. இதனால் 62 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. இதன் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட டி-20 தொடரில் இந்தியா 1-0 என்ற நிலையில் புள்ளிப்பட்டியலில் முன்னிலையில் உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.