செய்திகள்

நான் நானாக இருப்பேன்: விராட் கோலி பேட்டி

DIN

வாழ்க்கையில் நான் நானாக இல்லாவிட்டால் மைதானத்திலும் என்னால் சுயமாக இருக்க முடியாது என விராட் கோலி பேட்டியளித்தார்.

கடந்த வருடம் ஆர்சிபி அணி கேப்டன் பதவியிலிருந்து விலகிய விராட் கோலி, இந்திய டி20, டெஸ்ட் அணிகளின் கேப்டன் பதவியிலிருந்தும் விலகியுள்ளார். இந்நிலையில் ஆர்சிபி அணிக்கு அளித்த பேட்டியில் விராட் கோலி கூறியதாவது:

என்னால் முடியும் என எண்ணுவதற்கும் அதிகமான பொறுப்புகளைக் கையாள மாட்டேன். என்னால் நிறைய செய்ய முடியும் எனத் தோன்றினாலும் அதன் வேலையில் என்னால் ஈடுபாடு காட்ட முடியவில்லையென்றால் அதைச் செய்ய மாட்டேன். உங்கள் சூழலில் இல்லாத ஒருவரால் உங்களுடைய முடிவுகளைப் புரிந்துகொள்ள முடியாது. வெளியே, மக்களுக்கென்று ஒரு எதிர்பார்ப்பு இருக்கும். அவர்களிடம் நிலைமையை விளக்குவேன். என்னுடைய பணிச்சுமையை நான் கவனத்தில் கொள்ள வேண்டும். 

என்னுடைய முடிவை இன்னும் ஒரு வருடத்துக்கு நீட்டிக்க விரும்பவில்லை. அதனால் எந்தப் பயனும் இல்லை. வாழ்க்கைத் தரம் தான் எனக்கு முக்கியம். கிரிக்கெட்டின் தரமும் எனக்கு மிக முக்கியம். தினமும் என்ன செய்து வருகிறோமோ அதையே செய்யத் தோன்றும். எண்ணிக்கையை விடவும் தரம் முக்கியம் என்பதைக் கடைசியில் அறிவீர்கள். கடின உழைப்பில் எண்ணிக்கையையும் அதைச் செயல்படுத்துவதில் தரத்தையும் கடைப்பிடிக்க வேண்டும். அதுதான் முக்கியம். வேலையில் எண்ணிகைக்கு முக்கியத்துவம் அளித்தால் சீக்கிரம் சோர்ந்துவிடுவீர்கள். என்னுடைய வாழ்க்கையின் ஒவ்வொரு நாளிலும் நான் நானாக இல்லாவிட்டால் மைதானத்திலும் நான் நானாக இருக்க முடியாது. வேறு ஆளாக மாறிவிடுவேன். நான் நானாக இருப்பதால் தான் இந்நிலையை அடைந்துள்ளேன். அதனால் மக்களால் என்னுடன் தொடர்புபடுத்திக்கொள்ள முடிகிறது. அதனால் தான் என் குடும்பத்தினர், என் நண்பர்கள் என்னுடன் தொடர்பில் உள்ளார்கள். நான் நானாக இருப்பதால் தான் அது சாத்தியமாகிறது என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹாட் ஸ்பாட் ஓடிடி தேதி!

வெப்ப அலை: கேரளத்தில் 3 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை!

சுங்கச்சாவடி கட்டணத்தை பணமாக வசூலித்தால் அபராதமா?

சஞ்சு சாம்சன் விக்கெட் குறித்து சங்ககாரா கூறியது என்ன?

மெட் காலாவில் சஹீரா!

SCROLL FOR NEXT