மோமினுல் ஹஹ் (வலது) - லிடன் தாஸ் 
செய்திகள்

நியூசி. அணியை வீழ்த்துமா வங்கதேசம்?: 401/6 ரன்களுடன் முதல் இன்னிங்ஸில் முன்னிலை

முதல் டெஸ்டில் வங்கதேச அணி பேட்டர்கள் தொடர்ச்சியாகச் சிறப்பாக விளையாடி முதல் இன்னிங்ஸில் தங்கள் அணி முன்னிலை பெற உதவியுள்ளார்கள்.

DIN

நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் வங்கதேச அணி பேட்டர்கள் தொடர்ச்சியாகச் சிறப்பாக விளையாடி முதல் இன்னிங்ஸில் தங்கள் அணி முன்னிலை பெற உதவியுள்ளார்கள்.

வங்கதேச அணி நியூசிலாந்துக்குச் சுற்றுப்பயணம் செய்து இரு டெஸ்டுகளில் விளையாடுகிறது.

முதல் டெஸ்டில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 328 ரன்கள் எடுத்தது. இதன்பிறகு சிறப்பாக விளையாடி வருகிறார்கள் வங்கதேச பேட்டர்கள்.

2-ம் நாள் முடிவில் வங்கதேச அணி, 67 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 175 ரன்கள் எடுத்தது. இந்நிலையில் இன்றும் அபாரமாக விளையாடி ரன்கள் குவித்தார்கள் வங்கதேச பேட்டர்கள். நேற்று 70 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்த மஹ்முதுல் ஹசன் ஜாய் இன்று 78 ரன்களில் ஆட்டமிழந்தார். ஷாண்டோ 64 ரன்களும் கேப்டன் மோமினுல் ஹஹ் 88 ரன்களும் விக்கெட் கீப்பர் லிடன் தாஸ் 86 ரன்களும் எடுத்து நியூசிலாந்து அணியை வெறுப்பேற்றினார்கள். எனினும் ஒருவரால் சதமடிக்க முடியாமல் போனது. 

3-ம் நாள் முடிவில் வங்கதேச அணி, 156 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 401 ரன்கள் எடுத்து முதல் இன்னிங்ஸில் 73 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. யாஷிர் அலி 11, மெஹிதி ஹசன் மிராஸ் 20 ரன்கள் எடுத்துக் களத்தில் உள்ளார்கள். டிரெண்ட் போல்ட், நீல் வாக்னர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்கள்.  மூன்று நாள்களிலும் சிறப்பாக விளையாடிய வங்கதேச அணி, முதல் டெஸ்டில் வெற்றி பெறுமா என்கிற ஆவலை கிரிக்கெட் உலகில் ஏற்படுத்தியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

போகிப் பண்டிகையின்போது சேகரமாகும் கழிவுகளை தூய்மைப் பணியாளரிடம் ஒப்படைக்க வலியுறுத்தல்

தெருநாய்கள் கடித்ததில் 2 ஆடுகள் உயிரிழப்பு

வீட்டு வசதி வாரியம் பயன்படுத்தாத 16 ஆயிரம் ஏக்கா் நிலம் உரியவா்களிடம் ஒப்படைப்பு: அமைச்சா் சு.முத்துசாமி

ஜனவரி 16-இல் மதுபானக் கடைகளுக்கு விடுமுறை

பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி திருப்பூா் மாநகராட்சி அதிமுக உறுப்பினா்கள் தா்ணா

SCROLL FOR NEXT