செய்திகள்

குறைந்த பந்துகளில் 50 டெஸ்ட் விக்கெட்டுகள்: தெ.ஆ. வீரர் சாதனை

குறைந்த பந்துகளில் 50 டெஸ்ட் விக்கெட்டுகள் எடுத்த 2-வது வீரர் என்கிற பெருமையை தென்னாப்பிரிக்க வீரர் ஆலிவியர் பெற்றுள்ளார்.

DIN

குறைந்த பந்துகளில் 50 டெஸ்ட் விக்கெட்டுகள் எடுத்த 2-வது வீரர் என்கிற பெருமையை தென்னாப்பிரிக்க வீரர் ஆலிவியர் பெற்றுள்ளார்.

இந்திய அணி தென்னாப்பிரிக்காவில் 3 டெஸ்ட், 3 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடுகிறது. செஞ்சுரியனில் நடைபெற்ற முதல் டெஸ்டில் இந்திய அணி 113 ரன்கள் வித்தியாசத்தில் வென்று டெஸ்ட் தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது. 2-வது டெஸ்ட் இன்று தொடங்கியுள்ளது.

ஜொகன்னஸ்பர்க்கில் நடைபெறும் டெஸ்டில் இந்திய அணி டாஸ் வென்று பேட்டிங்கைத் தேர்வு செய்தது. காயம் காரணமாக இந்த டெஸ்டிலிருந்து விராட் கோலி விலகியுள்ளார். இதனால் கே.எல். ராகுல் கேப்டனாகக் களம் இறங்கியுள்ளார். டாஸ் வென்ற ராகுல், பேட்டிங்கைத் தேர்வு செய்தார். இந்திய அணியில் கோலிக்குப் பதிலாக ஹனுமா விஹாரி தேர்வாகியுள்ளார். தெ.ஆ. அணியில் ஓய்வு பெற்ற டி காக்குக்குப் பதிலாக கைல் வெரீனும் முல்டருக்குப் பதிலாக ஆலிவியரும் தேர்வாகியுள்ளார்கள். 

டெஸ்டின் முதல் நாளில் ஆலிவியரின் அடுத்தடுத்த பந்துகளில் புஜாராவும் ரஹானேவும் ஆட்டமிழந்தார்கள். இதையடுத்து 11-வது டெஸ்டில் 50 விக்கெட்டுகளைப் பூர்த்தி செய்துள்ளார் ஆலிவியர்.

குறைந்த டெஸ்டுகளில் விரைவாக 50 விக்கெட்டுகளை எடுத்த வீரர்களின் பட்டியலில் ஆஸ்திரேலியாவின் டர்னர் முதலிடத்தில் உள்ளார். 1888-ல் 6-வது டெஸ்டிலேயே இந்த இலக்கை அவர் அடைந்தார். தென்னாப்பிரிக்காவின் வெர்னான் பிலாண்டர் 7 டெஸ்டுகளில் 50 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.

குறைந்த பந்துகளில் விரைவாக 50 விக்கெட்டுகள் எடுத்த வீரர்களின் பட்டியலில் வெர்னான் பிலாண்டர் முதலிடத்தில் உள்ளார். 1240 பந்துகளில் அவர் இச்சாதனையைச் செய்தார். 2-வது இடத்தை 29 வயது டுவைன் ஆலிவியர் பெற்றுள்ளார். 1486 பந்துகள்.

குறைந்த பந்துகளில் 50 டெஸ்ட் விக்கெட்டுகள்

1240 - பிலாண்டர்

1486 - ஆலிவியர் 

1512 - ஜானி பிரிக்ஸ் 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சாதிக்கப் பிறந்தவர்கள் தனுசு ராசிக்காரர்கள்!

புதிய சீரியலில் நடிக்கும் பாக்கியலட்சுமி சுசித்ரா!

இங்கிலாந்தை 6 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா த்ரில் வெற்றி; டெஸ்ட் தொடர் சமன்!

அடுத்த 4 நாள்களுக்கு எங்கெல்லாம் கனமழை பெய்யும்?

நண்பர்களைத் தவிர்த்து... குடும்பத்துடன் பிறந்தநாள் கொண்டாடிய நடிகை!

SCROLL FOR NEXT