மிதாலி ராஜ் 
செய்திகள்

மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை: இந்திய அணி அறிவிப்பு, இரு பிரபல வீராங்கனைகளுக்கு இடமில்லை!

மிதாலி ராஜ் தலைமையிலான அணியில் பிரபல வீராங்கனைகளான ஜெமிமா ரோட்ரிகஸ், ஷிகா பாண்டே ஆகிய இருவரும் இடம்பெறவில்லை.

DIN

மகளிர் ஒருநாள் உலகக் கோப்பைக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

நியூசிலாந்தில் மார்ச் 4 முதல்  மகளிர் 50 ஓவர் உலகக் கோப்பைப் போட்டி நடைபெறுகிறது. 31 நாள்களுக்கு ஆறு நகரங்களில் 31 ஆட்டங்கள் நடைபெற்றவுள்ளன. நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, இந்தியா, வங்கதேசம், பாகிஸ்தான், மேற்கிந்தியத் தீவுகள் என 8 அணிகள் இப்போட்டியில் பங்கேற்கின்றன. 8 அணிகளும் இதர அணிகளுடன் ஒரு முறை மோதும் விதத்தில் லீக் ஆட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. புள்ளிகள் பட்டியலில் முதல் நான்கு இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்குத் தகுதி பெறும். ஏப்ரல் 3 அன்று இறுதிச்சுற்று ஆட்டம் நடைபெறவுள்ளது.

இந்நிலையில் ஒருநாள் உலகக் கோப்பைக்கான இந்திய மகளிர் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. மிதாலி ராஜ் தலைமையிலான அணியில் பிரபல வீராங்கனைகளான ஜெமிமா ரோட்ரிகஸ், ஷிகா பாண்டே ஆகிய இருவரும் இடம்பெறவில்லை. மேக்னா சிங், ரேணுகா சிங், யாஷ்திகா பாட்டியா ஆகியோருக்கு இந்திய அணியில் இடம் கிடைத்துள்ளது.

இந்திய அணி நியூசிலாந்துக்கு எதிராக 5 ஒருநாள், ஒரு டி20 ஆட்டத்திலும் பங்கேற்கிறது. பிப்ரவரி 9 முதல் 24 வரை இத்தொடர்கள் நடைபெறுகின்றன. 

இந்திய அணி

மிதாலி ராஜ் (கேப்டன்), ஹர்மன்ப்ரீத் கெளர் (துணை கேப்டன்), ஸ்மிருதி மந்தனா, ஷஃபாலி வர்மா, யாஷ்திகா பாட்டியா, தீப்தி சர்மா, ரிச்சா கோஷ் (விக்கெட் கீப்பர்), ஸ்நேக் ராணா, ஜுலான் கோஸ்வாமி, பூஜா வஸ்த்ரகர், மேக்னா சிங், ரேணுகா சிங், தானியா பாட்டியா (விக்கெட் கீப்பர்), ராஜேஷ்வரி கயாக்வாட், பூணம் யாதவ்.

மாற்று வீராங்கனைகள்: சபினேனி மேக்னா, ஏக்தா பிஸ்த், சிம்ரன் தில் பகதூர்.

இந்திய அணியின் உலகக் கோப்பை ஆட்டங்கள்

vs பாகிஸ்தான், மார்ச் 6
vs நியூசிலாந்து, மார்ச் 10
vs மே.இ. தீவுகள், மார்ச் 12
vs இங்கிலாந்து, மார்ச் 16
vs ஆஸ்திரேலியா, மார்ச் 19
vs வங்கதேசம், மார்ச் 22
vs தென்னாப்பிரிக்கா, மார்ச் 27

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருப்பூா் பின்னலாடை தொழிலை மீட்க நடவடிக்கை தேவை: பிரதமருக்கு இபிஎஸ் கடிதம்

எதிர்நீச்சல் போடுபவர்கள் இவர்கள்: தினப்பலன்கள்!

நளினி சிதம்பரம் உறவினா் கொலை வழக்கு: 4 பேருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனை நிறுத்திவைப்பு

விமான நிலையங்களுக்கு அருகிலுள்ள கட்டடங்களின் உயரக் கட்டுப்பாடுகள்: சா்வதேச ஆய்வுக்கு அரசு திட்டம்

காதலி ஏமாற்றியதால் இளைஞா் வெளிநாட்டில் தற்கொலை

SCROLL FOR NEXT