ரிஷப் பந்த் 
செய்திகள்

தோனி எனக்குச் சொன்ன முக்கியமான அறிவுரை: ரிஷப் பந்த் ஆட்டத்தை முன்வைத்து விராட் கோலி

எம்.எஸ். தோனி என்னிடம் ஒருமுறை சொன்னார், ஒருபோதும் செய்த தவறை...

DIN

இந்திய அணி தென்னாப்பிரிக்காவில் 3 டெஸ்ட், 3 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடுகிறது. செஞ்சுரியனில் நடைபெற்ற முதல் டெஸ்டில் இந்திய அணி 113 ரன்கள் வித்தியாசத்தில் வென்று டெஸ்ட் தொடரில் 1-0 என முன்னிலை வகித்தது. எனினும் ஜொகன்னஸ்பர்க்கில் நடைபெற்ற 2-வது டெஸ்டை தென்னாப்பிரிக்க அணி, 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்று தொடரை 1-1 என சமன் செய்துள்ளது. 3-வது டெஸ்ட், கேப் டவுனில் ஜனவரி 11 அன்று தொடங்குகிறது.

ரிஷப் பந்த் 2-வது இன்னிங்ஸில் ரன் எதுவும் எடுக்காத நிலையில் ரபாடாவின் பந்தை முன்னேறி வந்து அடிக்க முயன்று விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இதனால் பொறுப்பற்ற முறையில் விளையாடிய ரிஷப் பந்தைப் பலரும் விமர்சனம் செய்துள்ளார்கள். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிச்சுற்று முதல் ரிஷப் பந்த் மோசமாகவே விளையாடி வருகிறார். 13 இன்னிங்ஸில் ஒரு அரை சதம் மட்டுமே எடுத்துள்ளார்.

ரிஷப் பந்தின் ஆட்டம் பற்றி இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி கூறியதாவது:

எல்லோரும் தவறுகள் செய்கிறோம். உங்களுடைய தவறை அறிந்துகொள்ள வேண்டும். அதுதான் முக்கியம். எம்.எஸ். தோனி என்னிடம் ஒருமுறை சொன்னார், ஒருபோதும் செய்த தவறை அடுத்த 7-8 மாதங்களுக்கு மீண்டும் செய்யாதே என்று. அந்தப் பாடம் என்னிடம் அப்படியே தங்கிவிட்டது என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திமுக என்றுமே மக்கள் செல்வாக்குடன் வென்றதில்லை: நயினார் நாகேந்திரன்

பிகாரில் குளிர் அலை எச்சரிக்கை! 12 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்!

2025: புறக்கணிப்பும் படுதோல்வியும்... இந்தியாவின் கைஜென் எப்போது?

அராஜக ஆட்சி நடத்தும் திமுக ஏப்ரலில் வீட்டுக்குச் செல்வர்: எல். முருகன்

டி20 உலகக் கோப்பை : 15 பேர் கொண்ட இந்திய அணி!

SCROLL FOR NEXT