செய்திகள்

வாஷிங்டன் சுந்தருக்குப் பதில் ஜெயந்த் யாதவ்: இந்திய அணியில் மாற்றம்

DIN


தென் ஆப்பிரிக்காவுடனான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் வாஷிங்டன் சுந்தருக்குப் பதில் ஜெயந்த் யாதவ் சேர்க்கப்பட்டுள்ளார்.

தென் ஆப்பிரிக்கா, இந்தியா இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் வரும் 19-ம் தேதி தொடங்குகிறது.

கே.எல். ராகுல் தலைமையிலான இந்திய அணி ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட நிலையில், வாஷிங்டன் சுந்தருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால், அவர் தென் ஆப்பிரிக்கா புறப்படுவதில் சந்தேகம் இருந்தது.

இந்த நிலையில், அவருக்குப் பதில் ஜெயந்த் யாதவ் சேர்க்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.

இதுபற்றிய பிசிசிஐ-யின் செய்திக் குறிப்பு:

"பெங்களூரு முகாமில் வாஷிங்டன் சுந்தருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதியான நிலையில், தென் ஆப்பிரிக்காவுடனான ஒருநாள் தொடரிலிருந்து அவர் விலகியுள்ளார். அவருக்கு மாற்றாக ஜெயந்த் யாதவ் சேர்க்கப்பட்டுள்ளார்.

மேலும், முகமது சிராஜ் காயத்திலிருந்து மீண்டு வருவதால் கூடுதல் வீரராக முகமது சைனியும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்."

இந்திய அணி:

கே.எல். ராகுல் (கேப்டன்), ஜாஸ்பிரித் பும்ரா (துணை கேப்டன்), ஷிகர் தவான், ருதுராஜ் கெய்க்வாட், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஷ்ரேயஸ் ஐயர், வெங்கடேஷ் ஐயர், ரிஷப் பந்த், (விக்கெட் கீப்பர்), இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), யுஸ்வேந்திர சஹால், ஆர். அஸ்வின், புவனேஷ்வர் குமார், தீபக் சஹார், பிரசித் கிருஷ்ணா, ஷர்துல் தாக்குர், முகமது சிராஜ், ஜெயந்த் யாதவ், நவ்தீப் சைனி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

இன்றைய ராசி பலன்கள்!

SCROLL FOR NEXT