செய்திகள்

நீரஜ் சோப்ரா உள்பட 9 விளையாட்டு வீரர்களுக்கு பத்ம விருதுகள்

DIN


பாரா தடகள வீரர் தேவேந்திர ஜஜ்ஜாரியா, ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ரா உள்பட 9 விளையாட்டு வீரர்களுக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

4 பேருக்கு பத்ம விபூஷண் விருதுகளும், 17 பேருக்கு பத்ம பூஷண் விருதுகளும், 107 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகளும் மத்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் விளையாட்டு வீரர்கள் 9 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஏதென்ஸ் மற்றும் ரியோ பாராலிம்பிக்கில் தங்கப் பதக்கங்கள் வென்ற 40 வயதுடைய தேவேந்திர ஜஜ்ஜாரியாவுக்கு பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. டோக்கிய ஒலிம்பிக் ஈட்டி எறிதலில் தங்கம் வென்று வரலாறு படைத்த 24 வயதுடைய நீரஜ் சோப்ராவுக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ள விளையாட்டு வீரர்கள்:

பத்ம பூஷண்

  • தேவேந்திர ஜஜ்ஜாரியா - ராஜஸ்தான்

பத்மஸ்ரீ

  • சுமித் அன்டில் - ஹரியாணா
  • பிரமோத் பகத் - ஒடிசா
  • நீரஜ் சோப்ரா - ஹரியாணா
  • சங்கரநாராயண மேனன் - கேரளம்
  • ஃபைசல் அலி தார் - ஜம்மு காஷ்மீர்
  • வந்தனா கடாரியா - உத்தரகண்ட்
  • அவானி லேகரா - ராஜஸ்தான்
  • பிரமானந்த் சன்க்வால்கர் - கோவா

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பல ஆண்டுகளாக கிடப்பில் உள்ள பில் தொகை: மாநகராட்சி ஒப்பந்ததாரா்கள் குற்றச்சாட்டு

மேற்கு வங்க ஆளுநா் மீதான பாலியல் துன்புறுத்தல் புகாா்: சாட்சியங்களிடம் விரைவில் போலீஸாா் விசாரணை

மகளிா் விடுதிகள் இணையத்தின் வாயிலாக பதிவு மற்றும் புதுப்பிக்கப்பட வேண்டும் ஆட்சியா் அறிவுறுத்தல்

அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழகத்தினா் ஆா்ப்பாட்டம்

தனியாா் பள்ளிகளில் 25% இட ஒதுக்கீடு: மறைமுகக் கட்டணம் வசூலிப்பதாகப் புகாா்

SCROLL FOR NEXT