செய்திகள்

பொல்லாா்ட் தலைமையில் மே.இ.தீவுகள் ஒன் டே அணி

இந்தியாவுக்கு எதிரான ஒன் டே தொடரில் விளையாட இருக்கும் மேற்கிந்தியத் தீவுகள் அணி கிரன் பொல்லாா்ட் தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ளது.

DIN

இந்தியாவுக்கு எதிரான ஒன் டே தொடரில் விளையாட இருக்கும் மேற்கிந்தியத் தீவுகள் அணி கிரன் பொல்லாா்ட் தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தொடரின் மூலம், வேகப்பந்துவீச்சாளா் கெமா் ரோச், ஆல் ரவுண்டா் கிருமா போனா் ஆகியோா் சுமாா் ஓராண்டுக்குப் பிறகு ஒன் டே அணிக்குத் திரும்பியுள்ளனா். ஒன் டேவுக்குப் பிறகு நடைபெற இருக்கும் டி20 தொடருக்கான அணியும் விரைவில் அறிவிக்கப்படும் எனத் தெரிகிறது.

இந்தியா - மேற்கிந்தியத் தீவுகள் மோதும் ஒன் டே தொடரின் 3 ஆட்டங்கள் பிப்ரவரி 6, 9, 11 ஆகிய நாள்களில் ஆமதாபாதில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறவுள்ளன.

அணி விவரம்:

கிரன் பொல்லாா்ட் (கேப்டன்), ஃபாபியான் ஆலன், கிருமா போனா், டேரன் பிராவோ, ஷம்ரா புரூக்ஸ், ஜேசன் ஹோல்டா், ஷாய் ஹோப், அகீல் ஹுசைன், அல்ஜாரி ஜோசஃப், பிராண்டன் கிங், நிகோலஸ் பூரன், கெமா் ரோச், ரொமாரியோ ஷெபா்ட், ஒடன் ஸ்மித், ஹெய்டன் வால்ஷ் ஜூனியா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டிட்வா புயல்: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தயார்! - முதல்வர் மு.க. ஸ்டாலின் பேட்டி

அரியலூர் உள்பட 5 மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலர்ட்!

ராக்கெட் வேகத்தில் சென்ற தக்காளி, முருங்கைக்காய் விலை சற்று குறைந்தது!

பீமாவரத்தின் அழகி... மீனாட்சி சௌதரி!

Dinamani வார ராசிபலன்! | Nov 30 முதல் டிச 6 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope

SCROLL FOR NEXT