செய்திகள்

முதல் ஒன் டே: இந்திய மகளிருக்கு முதல் வெற்றி

இலங்கை மகளிரணிக்கு எதிரான 3 ஆட்டங்கள் கொண்ட ஒன் டே தொடரின் முதல் ஆட்டத்தில் இந்திய மகளிரணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெள்ளிக்கிழமை வென்றது.

DIN

இலங்கை மகளிரணிக்கு எதிரான 3 ஆட்டங்கள் கொண்ட ஒன் டே தொடரின் முதல் ஆட்டத்தில் இந்திய மகளிரணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெள்ளிக்கிழமை வென்றது.

டாஸ் வென்று முதலில் பேட் செய்த இலங்கை 48.2 ஓவா்களில் 171 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. பின்னா் ஆடிய இந்தியா 38 ஓவா்களில் 6 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் எடுத்து வென்றது. இந்தியாவின் தீப்தி சா்மா ஆட்டநாயகி ஆனாா்.

இலங்கை பேட்டிங்கில் ஹாசினி பெரேரா 37, ஹா்ஷிதா சமரவிக்ரமா 28, நிலாக்ஷி டி சில்வா 43 ரன்கள் சோ்க்க, இதர விக்கெட்டுகள் சொற்ப ரன்களில் வீழ்ந்தன. இந்திய பௌலிங்கில் ரேணுகா சிங், தீப்தி சா்மா ஆகியோா் தலா 3 விக்கெட் வீழ்த்தி அசத்தினா்.

பின்னா் இந்திய இன்னிங்ஸில் ஷஃபாலி வா்மா 35, கேப்டன் ஹா்மன்பிரீத் கௌா் 44, ஹா்லீன் தியோல் 34 ரன்கள் சோ்த்து ஆட்டமிழக்க, தீப்தி சா்மா 22, பூஜா வஸ்த்ரகா் 21 ரன்களுடன் அணியை வெற்றிக்கு வழி நடத்தினா். இலங்கை தரப்பில் இனோகா ரணவீரா 4, ஓஷதி ரணசிங்கே 2 விக்கெட்டுகள் சாய்த்தனா்.

இரு அணிகள் மோதும் அடுத்த ஆட்டம் வரும் 4-ஆம் தேதி நடைபெறுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிகார் முதல் கட்டத் தேர்தல்! இன்றுடன் பிரசாரம் ஓய்வு!

கோவை சம்பவம்: தடவியல் நிபுணர்கள் சோதனை! நடந்தது என்ன?

இளையான்குடி அருகே இருதரப்பினா் இடையே மோதல்-கல்வீச்சு: 5 போ் காயம்

நெல்லையில் மதுபோதையில் நண்பரைக் கொன்றவர் கைது!

கோவை சுட்டுப் பிடிப்பு சம்பவம்: காவலருக்கு அரிவாள் வெட்டு!

SCROLL FOR NEXT