தினேஷ் சண்டிமல் (கோப்புப் படம்) 
செய்திகள்

சண்டிமல் இரட்டைச் சதம்: முதல் இன்னிங்ஸில் 190 ரன்கள் இலங்கை முன்னிலை

இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் 554 ரன்கள் குவித்துள்ளது.

DIN

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டெஸ்டில் இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் 554 ரன்கள் குவித்துள்ளது.

இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்டை 10 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி. 2-வது டெஸ்ட், காலேவில் நடைபெற்று வருகிறது.

ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 364 ரன்கள் எடுத்தது. இலங்கை அணி, 3-ம் நாள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 431 ரன்களுடன் முன்னிலை பெற்றிருந்தது. தினேஷ் சண்டிமல் 118, மெண்டிஸ் 7 ரன்களுடன் களத்தில் இருந்தார்கள்.

4-ம் நாளான இன்று தினேஷ் சண்டிமல் சிறப்பாக விளையாடி இரட்டைச் சதத்தைப் பூர்த்தி செய்தார். இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் 181 ஓவர்களில் 554 ரன்கள் குவித்தது. தினேஷ் சண்டிமல் 326 பந்துகளில் 5 சிக்ஸர்கள், 16 பவுண்டரிகளுடன் 206 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். ஸ்டார்க் 4 விக்கெட்டுகளும் ஸ்வெப்சன் 3 விக்கெட்டுகளும் எடுத்தார்கள். இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் 190 ரன்கள் முன்னிலை பெற்று ஆதிக்கம் செலுத்தி வருகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

மழை வருமோ... ராதிகா கௌஷிக்!

தீவிரமடையும் நெல் அறுவடைப் பணிகள்

உங்களை உணரும் கலை... தீப்தி சுனைனா!

ஹூண்டாய் புதிய வென்யூ கார் அறிமுகம் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT