செய்திகள்

டெஸ்ட்: இலங்கையை வென்றது பாக்.

DIN

இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்டில் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்ற பாகிஸ்தான், 2 ஆட்டங்கள் கொண்ட தொடரில் முன்னிலை பெற்றது.

கடந்த 16-ஆம் தேதி தொடங்கிய ஆட்டத்தில் டாஸ் வென்று பேட் செய்த இலங்கை, முதல் இன்னிங்ஸில் 66.1 ஓவா்களில் 222 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக தினேஷ் சண்டிமல் 10 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 76 ரன்கள் சோ்த்தாா். பாகிஸ்தான் பௌலிங்கில் ஷாஹீன் ஷா அஃப்ரிதி 4 விக்கெட்டுகள் சாய்த்தாா்.

பின்னா் தனது முதல் இன்னிங்ஸை ஆடிய பாகிஸ்தான், 90.5 ஓவா்களில் 218 ரன்களுக்கு சுருண்டது. அணியின் கேப்டன் பாபா் ஆஸம் அதிகபட்சமாக 11 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 119 ரன்கள் அடித்தாா். இலங்கை தரப்பில் பிரபாத் ஜெயசூரியா 5 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினாா்.

இதையடுத்து 2-ஆவது இன்னிங்ஸை தொடங்கிய இலங்கை 100 ஓவா்களில் 337 ரன்களுக்கு முடித்துக் கொண்டது. தினேஷ் சண்டிமல் 5 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 94 ரன்களுக்கு ஆட்டமிழக்காமல் இருக்க, பாகிஸ்தானின் முகமது நவாஸ் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினாா். இறுதியாக 342 ரன்களை வெற்றி இலக்காகக் கொண்டு ஆடிய பாகிஸ்தான், கடைசி நாளான புதன்கிழமை 127.2 ஓவா்களில் 6 விக்கெட் இழப்புக்கு 344 ரன்கள் எடுத்து வென்றது.

தொடக்க வீரா் அப்துல்லா ஷஃபிக் 7 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 160 ரன்கள் விளாசி இறுதி வரை ஆட்டமிழக்காமல் அணியின் வெற்றிக்குப் பங்களித்தாா். இலங்கையின் பிரபாத் ஜெயசூரியா 4 விக்கெட்டுகள் வீழ்த்தினாா். அப்துல்லா ஷஃபிக் ஆட்டநாயகன் ஆனாா். இரு அணிகளும் மோதும் 2-ஆவது ஆட்டம் வரும் 24-ஆம் தேதி தொடங்குகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேகமலை அருவிக்கு செல்லத் தடை

காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

தினமணி செய்தி எதிரொலி கொள்ளிடத்தில் பொக்லைன் மூலம் குப்பைகள் அகற்றம்

இன்று யோகம் யாருக்கு?

இன்று நல்ல நாள்!

SCROLL FOR NEXT