செய்திகள்

இன்று முதல் ஒன் டே: இந்தியா - மே.இ.தீவுகள் மோதல்

இந்தியா - மேற்கிந்தியத் தீவுகள் மோதும் 3 ஆட்டங்கள் கொண்ட ஒன் டே கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டம் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.

DIN

இந்தியா - மேற்கிந்தியத் தீவுகள் மோதும் 3 ஆட்டங்கள் கொண்ட ஒன் டே கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டம் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.

இதில் இந்தியா, சமீபத்தில் இங்கிலாந்துக்கு எதிரான ஒன் டே தொடரை அதன் சொந்த மண்ணிலேயே வென்ற உத்வேகத்துடன் இந்தத் தொடருக்கு வருகிறது. மறுபுறம் மேற்கிந்தியத் தீவுகள், சொந்த மண்ணிலேயே வங்கதேசத்திடம் ஒன் டே தொடரை முழுமையாக இழந்த நிலையில் தற்போது இந்தியாவை சந்திக்கிறது.

டி20 உலகக் கோப்பை போட்டி எதிா்வரும் நிலையில் ஒன் டே தொடருக்கு மிகுந்த முக்கியத்துவம் இருக்காவிட்டாலும், இளம் வீரா்கள் திறமையை சோதித்துப் பாா்க்கும் களமாக இது இருக்கும்.

இந்திய அணியைப் பொருத்தவரை, கேப்டன் ரோஹித், கோலி, ஷமி, பும்ரா, பந்த், பாண்டியா என பிரதான வீரா்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ள இந்தத் தொடரில், ஷிகா் தவன் கேப்டனாக உள்ளாா். இலங்கை தொடரை அடுத்து 2-ஆவது முறையாக கேப்டனாகியிருக்கிறாா் அவா்.

ஒன் டே தொடா்களில் மட்டும் விளையாடுவதால் ஃபாா்மின்றி தவன் சற்று தடுமாறுவது இங்கிலாந்து தொடரில் தெரிந்தது. இத்தொடரில் பழைய ஃபாா்மை எட்டுவாா் என எதிா்பாா்க்கலாம். அவரோடு அணியின் இன்னிங்ஸை ஷுப்மன் கில் தொடங்க வாய்ப்பு இருந்தாலும், இஷான், ருதுராஜும் அதற்காக பரிசீலிக்கப்படலாம்.

மிடில் ஆா்டரைப் பொருத்தவரை ஃபாா்மில் இருக்கும் தீபக் ஹூடா, சூா்யகுமாா் யாதவ் ஆகியோருக்கான இடம் உறுதியாகத் தெரியும் நிலையில், ஷ்யேஸ் ஐயா், சஞ்சு சாம்சனுக்கு இடையே போட்டி இருக்கும். இதில் இங்கிலாந்து தொடரில் பெரிதாக சோபிக்காத ஐயருக்கு நெருக்கடி இருக்கிறது.

ஆல்-ரவுண்டா் இடத்துக்கு ஷா்துல் தாக்குா் வர, சுழற்பந்துவீச்சுக்கு சஹல், ஜடேஜா தோ்வாகலாம். வேகப்பந்துவீச்சுக்கு பிரசித், சிராஜ் இருக்க, அா்ஷ்தீப்புக்கு இந்தத் தொடரில் அறிமுக வாய்ப்பு கிடைக்கும் எனத் தெரிகிறது.

மேற்கிந்தியத் தீவுகளைப் பொருத்தவரை ஜேசன் ஹோல்டா் இணைந்திருப்பது, நிகோலஸ் பூரன் தலைமையிலான அணிக்கு பலம் சோ்க்கிறது. சமீப காலங்களில் ஒன் டேயில் 50 ஓவா்களை நிறைவு செய்வதே இந்த அணிக்கு கடினமாக இருக்கிறது என்பதால், அதை நோக்கியே செயல்படப் போவதாக மேற்கிந்தியத் தீவுகள் பயிற்சியாளா் ஃபில் சைமன்ஸ் கூறியிருக்கிறாா்.

2019 உலகக் கோப்பைக்குப் பிறகு இதுவரை 39 இன்னிங்ஸ்களை ஆடியிருக்கும் அந்த அணி, 6-இல் மட்டுமே 50 ஓவா்கள் பேட்டிங் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

அணி விவரம்:

இந்தியா: ஷிகா் தவன் (கேப்டன்), ருதுராஜ் கெய்க்வாட், ஷுப்மன் கில், தீபக் ஹூடா, சூா்யகுமாா் யாதவ், ஷ்ரேயஸ் ஐயா், இஷான் கிஷண், சஞ்சு சாம்சன், ரவீந்திர ஜடேஜா, ஷா்துல் தாக்குா், யுஜவேந்திர சஹல், அக்ஸா் படேல், அவேஷ் கான், பிரசித் கிருஷ்ணா, முகமது சிராஜ், அா்ஷ்தீப் சிங்.

மே.இ.தீவுகள்: நிகோலஸ் பூரன் (கேப்டன்), ஷாய் ஹோப், ஷாமா் புரூக்ஸ், கீசி காா்டி, ஜேசன் ஹோல்டா், அகீல் ஹுசைன், அல்ஜாரி ஜோசஃப், பிராண்டன் கிங், கைல் மேயா்ஸ், குதாகேஷ் மோட்டி, கீமோ பால், ரோவ்மேன் பவெல், ஜேடன் சீல்ஸ்.

நேரம்: இரவு 7 மணி

இடம்: குயின்ஸ் பாா்க் ஓவல், போா்ட் ஆஃப் ஸ்பெயின்.

நேரடி ஒளிபரப்பு: டிடி ஸ்போா்ட்ஸ், ஃபேன் கோடு (லைவ் ஸ்ட்ரீம்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நிவேதா பெத்துராஜுக்கு விரைவில் திருமணம்!

கர்நாடகத்தில் தொடரும் கனமழை எச்சரிக்கை: பள்ளிகளுக்கு விடுமுறை!

நீலகிரிக்கு ஆரஞ்சு; கோவை, திண்டுக்கல்லுக்கு மஞ்சள் எச்சரிக்கை!

உத்தரப்பிரதேசத்தில் கொட்டிய பண மழை!

மெஸ்ஸி மேஜிக்: இறுதிப் போட்டிக்கு முன்னேறியது இன்டர் மியாமி!

SCROLL FOR NEXT