செய்திகள்

காமன்வெல்த்தில் மனரீதியிலான துன்புறுத்தல்: குத்துச்சண்டை வீராங்கனை லவ்லினா புகார்

என்னுடைய பயிற்சி, போட்டி தொடங்கும் 8 நாள்களுக்கு முன்பே நிறுத்தப்பட்டுள்ளது.

DIN

காமன்வெல்த் போட்டிகளுக்கான பயிற்சியில் ஈடுபடும்போது மனரீதியிலான துன்புறுத்தல்களுக்கு ஆளாகியுள்ளதாக இந்தியக் குத்துச்சண்டை வீராங்கனை லவ்லினா புகார் தெரிவித்துள்ளார்.

டோக்கியோ ஒலிம்பிக்கில் மகளிருக்கான 69 கிலோ பிரிவு குத்துச்சண்டையில் இந்தியாவின் லவ்லினா போா்கோஹெய்ன் (23) வெண்கலப் பதக்கம் வென்றாா். ஒலிம்பிக்ஸ் குத்துச்சண்டைப் போட்டியில் பதக்கம் வென்ற இந்தியர்களான விஜேந்தர் சிங், மேரி கோம் ஆகியோருடன் அவர் இணைந்தார். 

2022 பிர்மிங்கம் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8 வரை நடைபெறுகின்றன. இந்நிலையில் குத்துச்சண்டை வீராங்கனை லவ்லினா, ட்விட்டரில் தெரிவித்துள்ளதாவது:

மனரீதியிலான துன்புறுத்தல்களுக்கு நான் ஆளாகிக்கொண்டிருப்பதை வேதனையுடன் தெரிவித்துக் கொள்கிறேன். ஒலிம்பிக்ஸில் நான் பதக்கம் வெல்ல உதவிய என்னுடைய பயிற்சியாளர்கள் ஒவ்வொருமுறையும் வெளியேற்றப்படுகிறார்கள். ஆயிரம் முறை கோரிக்கைகள் விடுத்த பிறகும் அவர்கள் தாமதமாகவே பயிற்சிக்கு அனுமதிக்கப்படுகிறார்கள். இது என்னுடைய பயிற்சியைப் பாதிக்கிறது. இதனால் நான் மனரீதியிலான துன்புறுத்தல்களுக்கு ஆளாகிறேன். 

காமன்வெல்த் கிராமத்திலிருந்து என்னுடைய பயிற்சியாளர் சந்தியா வெளியேற்றப்பட்டு விட்டார். பயிற்சியாளர் வெளியேற்றப்பட்டதால் என்னுடைய பயிற்சி, போட்டி தொடங்கும் 8 நாள்களுக்கு முன்பே நிறுத்தப்பட்டுள்ளது. பலமுறை கோரிக்கை விடுத்த பின்பும் என்னுடைய இன்னொரு பயிற்சியாளர் இந்தியாவுக்கு அனுப்பப்பட்டுள்ளார். என்னால் எப்படி விளையாட்டில் கவனம் செலுத்த முடியும் எனத் தெரியவில்லை. கடந்த உலக சாம்பியன்ஷிப் போட்டியின்போது இதுபோன்ற நிலை என்னுடைய ஆட்டத்திறனைப் பாதித்தது. இந்தமுறையும் இந்த அரசியலால் காமன்வெல்த் கேம்ஸில் பங்கேற்கும் நான் பாதிக்கப்படக்கூடாது. இந்த அரசியலைத் தகர்த்து இந்தியாவுக்காகப் பதக்கம் வெல்வேன் என நம்புகிறேன் என்று கூறியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜெரூசலேமில் பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு! 5 பேர் பலி!

பாஜகவிலிருந்து விலகிய புதுச்சேரி முன்னாள் தலைவர்!

ஜிஎஸ்டி குறைப்பு: ராயல் என்ஃபீல்டு பைக்குகள் விலையில் மாற்றம்!

ஓடிடியில் கவனம் பெறும் பன் பட்டர் ஜாம்!

தேசிய ஜனநாயக கூட்டணி எம்.பி.க்களைச் சந்திக்கிறார் பிரதமர் மோடி!

SCROLL FOR NEXT