செய்திகள்

ரஞ்சி: ஓர் ஆட்டத்திலும் தோற்காத பெங்கால் அணி அரையிறுதிக்குத் தகுதி

அபிமன்யு ஈஸ்வரன் தலைமையில் இந்த வருட ரஞ்சி கோப்பைப் போட்டியில் விளையாடி வரும் பெங்கால் அணி இதுவரை ஓர் ஆட்டத்திலும் தோற்கவில்லை. 

DIN

அபிமன்யு ஈஸ்வரன் தலைமையில் இந்த வருட ரஞ்சி கோப்பைப் போட்டியில் விளையாடி வரும் பெங்கால் அணி இதுவரை ஓர் ஆட்டத்திலும் தோற்கவில்லை. 

காலிறுதிச் சுற்றில் நான்காம் நாளன்று மூன்று ஆட்டங்களின் முடிவு தெரிந்த நிலையில் பெங்கால் - ஜார்கண்ட் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் 5-ம் நாளுக்குச் சென்றது. 

உத்தரகண்ட் அணிக்கு எதிரான ரஞ்சி கோப்பைக் காலிறுதி ஆட்டத்தில் மும்பை அணி, 725 ரன்கள் வித்தியாசத்தில் வென்று அரையிறுதிக்குத் தகுதி பெற்றது. கர்நாடகத்துக்கு எதிரான காலிறுதி ஆட்டத்தை உத்தரப் பிரதேச அணி, 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. பஞ்சாப் அணிக்கு எதிரான காலிறுதி ஆட்டத்தை மத்தியப் பிரதேச அணி, 10 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

பெங்கால் - ஜார்கண்ட் அணிகளுக்கு இடையிலான காலிறுதி ஆட்டத்தில் 4-ம் நாள் இறுதியில் பெங்கால் அணி 31 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 76 ரன்கள் எடுத்தது. 2-வது இன்னிங்ஸில் 7 விக்கெட்டுகள் மீதமுள்ள நிலையில் 551 ரன்கள் முன்னிலை பெற்றது. கடைசி நாளில் பெங்கால் அணி 2-வது இன்னிங்ஸில் 85.1 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 318 ரன்கள் எடுத்து இன்னிங்ஸை டிக்ளேர் செய்தது. மனோஜ் திவாரி 136 ரன்கள் எடுத்தார். இதையடுத்து ஆட்டம் டிராவில் முடிவடைந்தது. முதல் இன்னிங்ஸில் முன்னிலை பெற்றதால் பெங்கால் அணி அரையிறுதிக்குத் தகுதி பெற்றது.

அரையிறுதி ஆட்டங்கள் பெங்களூரில் ஜூன் 14 அன்று நடைபெறுகின்றன. 

அரையிறுதிச் சுற்றில் மோதும் அணிகள்

மும்பை vs உத்தரப் பிரதேசம்
மத்தியப் பிரதேசம் vs பெங்கால்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரூ.590 கோடி முறைகேடு: ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் வங்கியின் பங்குகள் 20% சரிவு!

வெளியானது இறுதி வாக்காளர் பட்டியல் | செய்திகள்: சில வரிகளில் | 23.02.26

இறுதி வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லையா? மீண்டும் விண்ணப்பிக்கலாம்!

ஹெட்மேயர், ரோவ்மன் பௌவல் அதிரடி: ஜிம்பாப்வேவுக்கு 255 ரன்கள் இலக்கு!

நாளை நல்ல முடிவை அறிவிப்பேன் : சசிகலா

SCROLL FOR NEXT