நியூசிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் இங்கிலாந்து அணியின் மூத்த வீரர் ஜோ ரூட், 176 ரன்களுக்கு ஆட்டமிழந்துள்ளார்.
லார்ட்ஸில் நடைபெற்ற முதல் டெஸ்டில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று 1-0 என முன்னிலை வகிக்கிறது. 2-வது டெஸ்ட் நாட்டிங்கமில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தது. நியூசி. கேப்டன் கேன் வில்லியம்சனுக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டதால் இந்த டெஸ்டில் அவர் பங்கேற்கவில்லை.
நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 145.3 ஓவர்களில் 553 ரன்கள் எடுத்தது. டேரில் மிட்செல் 190, டாம் பிளண்டல் 106 ரன்கள் எடுத்தார்கள். ஆண்டர்சன் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதையடுத்து பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 3-ம் நாள் முடிவில், 114 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 473 ரன்கள் எடுத்தது. ரூட் 163, ஃபோக்ஸ் 24 ரன்களுடன் களத்தில் இருந்தார்கள்.
இரட்டைச் சதம் எடுப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஜோ ரூட், இன்று போல்ட் பந்தில் 176 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இங்கிலாந்து அணி 120 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 516 ரன்கள் எடுத்துள்ளது. ஃபோக்ஸ் 54 ரன்களுடன் களத்தில் உள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.