செய்திகள்

ஜெர்மனியில் சிகிச்சை மேற்கொள்ளும் கே.எல். ராகுல்: இங்கிலாந்து தொடர்களிலிருந்து விலகல்?

ஜூலை மாத இறுதியில் ராகுல் செல்வதால் இங்கிலாந்துக்கு எதிரான ஒரு டெஸ்ட், ஒருநாள், டி20 தொடர்கள் என அனைத்திலும்...

DIN

காயத்துக்குச் சிகிச்சை மேற்கொள்வதற்காக ஜெர்மனிக்குச் செல்லவுள்ளார் இந்திய அணியின் மூத்த வீரர் கே.எல். ராகுல்.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரிலிருந்து காயம் காரணமாக கே.எல். ராகுல் விலகினார். இதனால் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்டிலும் அவரால் பங்கேற்க முடியாது.

இதையடுத்து காயத்துக்குச் சிகிச்சை மேற்கொள்வதற்காக ஜெர்மனிக்கு கே.எல். ராகுல் செல்லவிருப்பதாக பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா ஒரு பேட்டியில் கூறியுள்ளார். ஜூலை மாத இறுதியில் ராகுல் செல்வதால் இங்கிலாந்துக்கு எதிரான ஒரு டெஸ்ட், ஒருநாள், டி20 தொடர்கள் என அனைத்திலும் ராகுலால் பங்கேற்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. 

இந்திய அணி அயர்லாந்துக்கும் இங்கிலாந்துக்கும் அடுத்ததாகச் சுற்றுப்பயணம் செய்கிறது. அயர்லாந்தில் ஜூன் 26, 28 தேதிகளில் இரு டி20 ஆட்டங்களை விளையாடுகிறது. இங்கிலாந்துக்கு எதிராக ஒரு டெஸ்ட், 3 ஒருநாள், 3 டி20 ஆட்டங்களில் இந்திய அணி விளையாடுகிறது. கடந்த வருடம் ரத்தான 5-வது டெஸ்ட், ஜூலை 1 அன்று தொடங்குகிறது. இங்கிலாந்தில் ஜூன் 24-27 தேதிகளில் இந்திய அணி 4 நாள் பயிற்சி ஆட்டத்தில் விளையாடுகிறது. 3 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடர் ஜூலை 7 அன்றும் 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடர் ஜூலை 12 அன்றும் தொடங்குகின்றன. இதன்பிறகு இந்திய அணி மேற்கிந்தியத் தீவுகளுக்குச் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள், 5 டி20 ஆட்டங்களில் விளையாடுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மாசாணி அம்மன் கோவிலில் விமலின் புதிய படப் பூஜை!

அறிமுகமானது விவோ ஒய் 400! தள்ளுபடி விலையில் பெறுவது எப்படி?

ஜஸ்பிரித் பும்ராவின் சாதனையை சமன்செய்த முகமது சிராஜ்!

உலோகம், ஆட்டோ துறை பங்குகள் ஏற்றத்தை தொடர்ந்து சென்செக்ஸ், நிஃப்டி உயர்வுடன் நிறைவு!

மாளவிகா மோகனன் பிறந்த நாளில் 3 திரைப்பட போஸ்டர்கள்!

SCROLL FOR NEXT