செய்திகள்

‘தளபதி 66' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் எப்போது? படக்குழு அறிவிப்பு

விஜய் பிறந்த நாளை முன்னிட்டு ஜூன் 21ஆம் தேதி ‘தளபதி 66' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்படும் என்று படக்குழு அறிவித்துள்ளது.

DIN

விஜய் பிறந்த நாளை முன்னிட்டு ஜூன் 21ஆம் தேதி ‘தளபதி 66' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்படும் என்று படக்குழு அறிவித்துள்ளது.

பீஸ்ட் திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் தற்போது தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கும் படத்தில் நடிக்கிறார். குடும்ப உறவுகளை மையமாகக் கொண்டு உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. படத்தில் விஜய்க்கு ஜோடியாக முதல்முறையாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். தமன் இசையமைக்கிறார். 

மேலும படத்தில் சரத்குமார், பிரபு, ஜெய சுதா, ஸ்ரீகாந்த், ஷாம், யோகிபாபு, பிரகாஷ் ராஜ், குஷ்பு, சங்கீதா, சம்யுக்தா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர். மகேஷ் பாபுவும் இந்தப் படத்தில் சிறப்பு வேடத்தில் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. படத்துக்கு வாரிசு அல்லது வெறித்தனம் எனப் பெயரிடப்பட்டுள்ளதாக தகவல் பரவி வருகிறது. 

இந்த நிலையில் விஜய் பிறந்த நாளை முன்னிட்டு ஜூன் 21ஆம் தேதி மாலை 6.01 மணிக்கு ‘தளபதி 66' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்படும் என்று படக்குழு அறிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திசையன்விளை அஞ்சலகத்தில் இணைய சேவை பாதிப்பு: மக்கள் அவதி

தில்லி முன்னாள் அமைச்சருக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத் துறை சோதனை

கைதிகளின் பற்களை பிடுங்கிய வழக்கு: பல்வீா் சிங் ஆஜா்

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: சிறப்பு உதவி ஆய்வாளருக்கு விதிக்கப்பட்ட சிறைத் தண்டனைக்கு இடைக்காலத் தடை

தூய்மைப் பணியாளா்கள் மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை: ஆட்சியா் உத்தரவு

SCROLL FOR NEXT