செய்திகள்

மழையால் நின்றுபோன ஆட்டத்திற்கு 50% டிக்கெட் பணம் திருப்பித் தரப்படும் : கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கம்

இந்தியா தென்னாபிரிக்காவுக்கு இடையேயான 5வது டி20 போட்டி மழையால் நின்று விட்டதால் பார்வையாளர்களுக்கு 50 சதவிகித டிக்கெட் பணம் திருப்பித் தரப்படுமென கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளது. 

DIN

இந்தியா தென்னாபிரிக்காவுக்கு இடையேயான 5வது டி20 போட்டி மழையால் நின்று விட்டதால் பார்வையாளர்களுக்கு 50 சதவிகித டிக்கெட் பணம் திருப்பித் தரப்படுமென கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளது. 

இந்தியா தென்னாப்பிரிகாவுக்கு இடையேயான 5வது கடைசியான முக்கியமான போட்டி பெங்களூருவிலுள்ள சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இந்திய அணி பேட்டிங் விளையாடிக்கொண்டிருந்த போது 3.3 ஓவரில் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் நிறுத்தப்படது. இரவு முழுவதும் மழை பெய்ததால் ஆட்டம் கைவிடப்பட்டது. இந்தத் தொடர் 2-2 என்ற சமநிலையில் இருந்ததால் இந்தப் போட்டியை பெரிதும் எதிர்பார்த்து காத்திருந்த கிரிக்கெட் ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர்.

இறுதியில் இந்தத் தொடரினை இரு அணிகளும் சமமாக பகிர்ந்துக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

“இந்தியா தென்னாப்பிரிக்காவுக்கு இடையேயான 5வது டி20 போட்டி மழையின் காரணமாக கைவிடப்படுகிறது என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம். விதிமுறைகளின்படி கிரிக்கெட்டில் ஒரு பந்து வீசினாலும் டிக்கெட் பணம் திருப்பித் தரப்படமாட்டாது. இருப்பினும் கேஎஸ்சிஏ கிரிக்கெட் ரசிகர்களுக்காக டிக்கெட் பணத்தில் 50 சதவிகித பணத்தை திருப்பித்தர இருக்கிறது. அசல் டிக்கெட்டை கொண்டுவந்து பணத்தை திரும்ப பெற்றுக் கொள்ளலாம். அதற்கான நடைமுறைகள் குறித்து விரைவில் தெரிவிக்கப்படும்” என கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கம் தெரிவித்தது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டி20 உலக கோப்பை: அரையிறுதிச் சுற்று வாய்ப்பைத் தக்க வைத்த இந்தியா! அபார வெற்றி!!

அரசு விழாவில் மயங்கி விழுந்து முதியவா் உயிரிழப்பு!

குழந்தைத் தொழிலாளா்களை பணியமா்த்தும் நிறுவன உரிமையாளா்களுக்கு 2 ஆண்டுகள் சிறை!

கரூா் ஒன்றியத்தில் ரூ. 6.43 கோடியில் 24 வளா்ச்சித் திட்டப் பணிகள்! வி. செந்தில்பாலாஜி எம்எல்ஏ தொடங்கிவைத்தாா்!

‘தி கேரளா ஸ்டோரி 2’ வெளியிட இடைக்கால தடை தொடருகிறது! - கேரள உயர்நீதிமன்றம்

SCROLL FOR NEXT