முகப்பு
செய்திகள்

டெக்டர் அதிரடி: இந்தியாவுக்கு 109 ரன்கள் இலக்கு

முதல் டி20 போட்டியில் இந்திய அணிக்கு 109 ரன்களை இலக்காக நிர்ணயித்தது அயர்லாந்து.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:38 AM
கோப்புப்படம்
பகிர்:

முதல் டி20 போட்டியில் இந்திய அணிக்கு 109 ரன்களை இலக்காக நிர்ணயித்தது அயர்லாந்து.

இந்தியா - அயா்லாந்து அணிகள் மோதும் முதல் டி20 ஆட்டம் டப்ளினில் இன்று நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஹாா்திக் பாண்டியா பந்துவீச்சைத் தேர்வு செய்தார். இருப்பினும் தொடர்ந்து மழை குறுக்கிட்டதால் ஆட்டம் 12 ஓவர்களாக குறைக்கப்பட்டது. 

இதனைத் தொடர்ந்து, முதலில் களமிறங்கிய அயர்லாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான பால் ஸ்ட்ரிலீங் மற்றும் ஆண்ட்ரியூ பால்ஃப்ரின் ஆகியோர் இந்திய அணியின் பந்துவீச்சில் திணறி அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

இருப்பினும், ஹாரி டெக்டரின் அதிரடி ஆட்டதால் அயர்லாந்து அணி 12 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 108 ரன்களை எடுத்தது. டெக்டர் 64 ரன்களை எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இந்நிலையில், 109 ரன்கள் என்கிற இலக்குடன் இந்திய அணி ஆட்டத்தைத் துவங்க உள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.