செய்திகள்

ரோஹித் சர்மாவுக்கு கரோனா: இந்திய அணியில் மயங்க் அகர்வால் சேர்ப்பு

ரோஹித் சர்மா கரோனாவால் பாதிக்கப்பட்டதையடுத்து மாற்று ஏற்பாடாக மயங்க் அகர்வால் இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

DIN

ரோஹித் சர்மா கரோனாவால் பாதிக்கப்பட்டதையடுத்து மாற்று ஏற்பாடாக மயங்க் அகர்வால் இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இங்கிலாந்துக்குச் சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய அணி 1 டெஸ்ட், 3 ஒருநாள், 3 டி20 ஆட்டங்களில் விளையாடுகிறது. பிர்மிங்கமில் ஜூலை 1 அன்று டெஸ்ட் தொடங்குகிறது.

இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால் பிர்மிங்கம் டெஸ்டில் ரோஹித் சர்மா விளையாடுவது சந்தேகம் எனத் தெரிகிறது. இதையடுத்து மாற்று ஏற்பாடாக 31 வயது மயங்க் அகர்வால் இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்திய அணிக்காக 21 டெஸ்டுகள், 5 ஒருநாள் ஆட்டங்களில் அவர் விளையாடியுள்ளார். இன்று இங்கிலாந்துக்கு வரும் மயங்க் அகர்வால், புதிய விதிமுறைகளின்படி தனிமைப்படுத்திக்கொள்ளத் தேவையில்லை. காயம் காரணமாக கே.எல். ராகுலும் பிர்மிங்கம் டெஸ்டில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. 

ரோஹித் சர்மாவால் கரோனா பாதிப்பிலிருந்து விரைவில் மீண்டு வர முடியாவிட்டால் பிர்மிங்கம் டெஸ்டில் ஷுப்மன் கில்லும் மயங்க் அகர்வாலும் தொடக்க வீரர்களாகக் களமிறங்க வாய்ப்புள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பங்குச் சந்தை உயர்வுடன் தொடக்கம்! ஆயில், ஸ்டீல் துறையில் ஏற்றம்!

இந்திய அரசியலமைப்பு நாள்: சில அழியா நினைவலைகள்!

ஸ்மிருதியின் தந்தை டிஸ்சார்ஜ்! பலாஷுடன் திருமணம் நடைபெறுமா?

உக்ரைன் - ரஷியா போர்: ஒரு வாரத்தில் 25,000 வீரர்கள் பலி - டிரம்ப்

குவாஹாட்டி டெஸ்ட்: கடைசி நாளிலும் தடுமாறும் இந்தியா! 5 விக்கெட்டுகளை இழந்தது!

SCROLL FOR NEXT