செய்திகள்

டி20 தரவரிசையில் பல படிகள் முன்னேறிய ஷ்ரேயஸ் ஐயர்

இலங்கைக்கு எதிரான டி20 தொடரில் சிறப்பாக விளையாடிய 27 வயது ஷ்ரேயஸ் ஐயர், ஐசிசி டி20 தரவரிசையில் பல படிகள் முன்னேறி 18-ம் இடத்தைப் பிடித்துள்ளார்.

DIN

இலங்கைக்கு எதிரான டி20 தொடரில் சிறப்பாக விளையாடிய 27 வயது ஷ்ரேயஸ் ஐயர், ஐசிசி டி20 தரவரிசையில் பல படிகள் முன்னேறி 18-ம் இடத்தைப் பிடித்துள்ளார்.

சமீபத்தில் முடிவடைந்த இலங்கைக்கு எதிரான டி20 தொடரை 3-0 என முழுமையாக வென்றது இந்திய அணி. இந்தத் தொடரில் 204 ரன்கள் எடுத்து தொடர் நாயகன் விருதைப் பெற்றார் ஷ்ரேயஸ் ஐயர். இதனால் ஐசிசி டி20 தரவரிசையில் 27 படிகள் முன்னேறி 18-ம் இடத்தை அவர் பிடித்துள்ளார். டி20 தொடரில் 57*, 74*, 73* என மூன்று ஆட்டங்களில் அவர் ஆட்டமிழக்கவில்லை. 

ஐபிஎல் 2022 போட்டிக்கான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் புதிய கேப்டனாக ஷ்ரேயஸ் ஐயர் சமீபத்தில் அறிவிக்கப்பட்டார். ஐபிஎல் ஏலத்தில் ஷ்ரேயஸ் ஐயரை ரூ. 12.25 கோடிக்குத் தேர்வு செய்தது கொல்கத்தா அணி.

டி20 தரவரிசையில் பாகிஸ்தானின் பாபர் ஆஸம் முதலிடத்தைத் தக்கவைத்துக்கொண்டுள்ளார். இலங்கையின் பதும் நிஸ்ஸாங்கா 9-ம் இடத்துக்கு முன்னேறியுள்ளார். கே.எல். ராகுல் 10-ம் இடத்துக்கு இறங்கியுள்ளார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எடப்பாடியார் இன்றுமுதல் முகமூடியார் என்று அழைக்கப்படுவார்! டிடிவி தினகரன்

இட ஒதுக்கீடு போராட்டத் தியாகிகள் நினைவு நாள்: ராமதாஸ், அன்புமணி தனித்தனியே மரியாதை!

3 நாள் டிஜிட்டல் அரெஸ்ட்: மாரடைப்பில் ஓய்வுபெற்ற மருத்துவர் மரணம்!

விழா மேடையில் நடைபெற்ற திருமண நிச்சயதார்த்தம்! கண்கலங்கிய அர்ச்சனா!

இந்தியா-பாகிஸ்தான் மோதலில் மூன்றாம் தரப்பு தலையீடு இல்லை: ராஜ்நாத் சிங்!

SCROLL FOR NEXT