செய்திகள்

அசார் அலியும் சதம்: பாக். அபார பேட்டிங்

ஆஸ்திரேலியாவுடனான முதல் டெஸ்ட் ஆட்டத்தில் அசார் அலியும் சதமடிக்க முதல் இன்னிங்ஸில் பாகிஸ்தான் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 476 ரன்கள் குவித்துள்ளது.

DIN


ஆஸ்திரேலியாவுடனான முதல் டெஸ்ட் ஆட்டத்தில் அசார் அலியும் சதமடிக்க முதல் இன்னிங்ஸில் பாகிஸ்தான் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 476 ரன்கள் குவித்துள்ளது.

பாகிஸ்தான், ஆஸ்திரேலியா இடையிலான முதல் டெஸ்ட் ஆட்டம் ராவல்பிண்டியில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற பாகிஸ்தான் கேப்டன் பாபர் அஸாம் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். இமாம் உல் ஹக் சதமடிக்க அந்த அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 245 ரன்கள் எடுத்தது. இமாம் 132 ரன்களுடனும், அசார் அலி 64 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

இரண்டாம் நாள் ஆட்டம் இன்று (சனிக்கிழமை) தொடங்கியது. இரண்டாவது விக்கெட்டுக்கு இந்த இணை 200 ரன்களைத் தாண்ட அசார் அலியும் சதத்தைக் கடந்தார்.

இதையடுத்து, இமாம் உல் ஹக் 157 ரன்கள் எடுத்திருந்த நிலையில், ஆஸ்திரேலிய கேப்டன் பேட் கம்மின்ஸ் வேகத்தில் ஆட்டமிழந்தார்.

3-வது விக்கெட்டுக்கு 101 ரன்கள் சேர்த்த நிலையில் பாபர் அஸாம் 36 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இரட்டைச் சதம அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட அசார் அலி 185 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

இதன்பிறகு, முகமது ரிஸ்வான் மற்றும் இஃப்திகார் அகமது ஆகியோர் நிதானம் காட்டினர். 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 476 ரன்கள் எடுத்திருந்தபோது முதல் இன்னிங்ஸை பாகிஸ்தான் டிக்ளேர் செய்தது.

இதன்பிறகு, ஆஸ்திரேலிய அணி ஒரு ஓவர் மட்டுமே விளையாடியது. போதிய வெளிச்சமின்மை காரணமாக இரண்டாவது நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது.

ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி விக்கெட் இழப்பின்றி 5 ரன்கள் எடுத்துள்ளது. உஸ்மான் கவாஜா 5 ரன்களுடனும், டேவிட் வார்னர் ரன் ஏதும் எடுக்காமலும் உள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அறிவியல்,பொறியியல் பட்டதாரிகளுக்கு சயின்டிஸ்ட் பணி: விண்ணப்பிப்பது எப்படி?

தலைவா முகத்தைப் பார்க்கணும்... ரஜினியால் ரசிகர்கள் உற்சாகம்!

நட்பு ரீதியான போட்டியில் சரமாரியாகத் தாக்கிக்கொண்ட கால்பந்து வீரர்கள்!

ரயில்வேயில் வேலை வேண்டுமா?: விளையாட்டு வீரர்களுக்கு வாய்ப்பு!

இப்போதும் மேக்கப் போடுவதற்கு முன் பாக்கியராஜை நினைப்பேன்: ஊர்வசி

SCROLL FOR NEXT