செய்திகள்

மகளிர் உலக்கோப்பை கிரிக்கெட்: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா 

மகளிர் உலக்கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் போட்டியில் பாகிஸ்தானை 107 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வீழ்த்தியது. 

DIN

மகளிர் உலக்கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் போட்டியில் பாகிஸ்தானை 107 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வீழ்த்தியது. 

நியூலாந்தின் பே ஓவல் மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை இந்தியா தனது முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானை எதிர்கொண்டது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய இந்தியா 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 244 ரன்கள் எடுத்தது. 

இந்திய அணியில் அதிகபட்சமாக பூஜா வஸ்த்ராகர் 67, ராணா 53, ஸ்மிரிதி மந்தனா 52, தீப்தி சர்மா 40 ரன்கள் சேர்த்தனர். 245 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணி களமிறங்கியது. ஆனால் இந்திய மகளிர் அணியின் அபார பந்துவீச்சு முன் பாகிஸ்தான் அணியால் தாக்குப்பிடிக்க முடியவில்லை.

அந்த அணி 43 ஓவர்களில் 137 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியை தழுவியது. பாகிஸ்தான் அணியில் அதிகபட்சமாக சிட்ரா அமீன் 30, டயானா 24, ஃபாத்திமா சானா 17, மரூஃப் 15, சிட்ரா நாவஸ் 12 ரன்கள் மட்டுமே எடுத்தனர். இந்திய தரப்பில் ராஜேஸ்வரி கெயக்வாட் 4, ஜுவான் கோஸ்வாமி, ஸ்னேக் ரானா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கைவிடப்பட்ட சிவகார்த்திகேயன் - சிபி சக்ரவர்த்தி திரைப்படம்?

இங்கு ரீ-டேக் இல்லை! அஜித் குமார் ரேசிங் ஆவணப்பட டிரைலர்!

மத்திய அமைச்சர் அமித் ஷாவுடன் பிகார் முதல்வர் நிதீஷ் குமார் சந்திப்பு

மகாநதி தொடர் ரீமேக்கில் சிறகடிக்க ஆசை சீரியல் நாயகி!

TVK-ன் சமத்துவ கிறிஸ்துமஸ் விழா! குழந்தைகளுடன் கேக் வெட்டிக் கொண்டாடிய விஜய்!

SCROLL FOR NEXT