செய்திகள்

பாட்மிண்டன் தரவரிசையில் 9-ம் இடத்துக்கு முன்னேறிய இந்திய இளம் வீரர்

இந்திய இளம் வீரர் லக்‌ஷயா சென், பாட்மிண்டன் தரவரிசையில் 9-ம் இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

DIN

இந்திய இளம் வீரர் லக்‌ஷயா சென், பாட்மிண்டன் தரவரிசையில் 9-ம் இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

பிர்மிங்கமில் சமீபத்தில் நடைபெற்ற ஆல் இங்கிலாந்து பாட்மிண்டன் போட்டியின் இறுதிச்சுற்றில் டென்மார்க்கைச் சேர்ந்த உலகின் நெ.1 வீரர் விக்டர் அக்ஸல்சென்னிடம் மோதினார் லக்‌ஷயா சென். 21-10, 21-15 என எளிதான முறையில் வென்று 2-வது முறையாக ஆல் இங்கிலாந்து பாட்மிண்டன் பட்டத்தை வென்றார் விக்டர். இருவரும் இதுவரை மோதிய ஆட்டங்களில் 5-ல் விக்டரும் ஓர் ஆட்டத்தில் லக்‌ஷயாவும் வென்றுள்ளார்கள். 21 வருடங்களுக்கு முன்பு ஆல் இங்கிலாந்து பாட்மிண்டன் போட்டியை வென்றார் இந்தியாவின் கோபிசந்த். அதற்குப் பிறகு மீண்டும் இன்னொரு இந்தியர் பட்டம் வெல்வார் என்கிற எதிர்பார்ப்பில் இருந்தார்கள் ரசிகர்கள். ஆல் இங்கிலாந்து இறுதிச்சுற்றில் பங்கேற்ற 4-வது வீரர் என்கிற பெருமையைப் பெற்றார் 20 வயது லக்‌ஷயா சென். 

இந்நிலையில் சமீபத்தில் வெளியிடப்பட்ட பாட்மிண்டன் தரவரிசையில் 9-ம் இடத்துக்கு முன்னேறியுள்ளார் லக்‌ஷயா சென். முதல்முறையாக முதல் 10 இடங்களுக்குள் இடம்பெற்றுள்ளார். ஆடவர் ஒற்றையர் பிரிவில் முன்னணியில் உள்ள இந்திய வீரர் இவர் தான். ஸ்ரீகாந்த் 12-ம் இடத்திலும் சார் பிரணீத் 19-ம் இடத்திலும் உள்ளார்கள். இந்தியா ஓபன் போட்டியை வென்ற லக்‌ஷயா சென், ஜெர்மன் ஓபன் மற்றும் ஆல் இங்கிலாந்து சாம்பியன்ஷிப் போட்டிகளில் 2-ம் இடத்தைப் பிடித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஐரோப்பிய ஒன்றியத்துடன் இந்தியா சுதந்திர வர்த்தக ஒப்பந்தம்!

2-வது ஒருநாள்: இருவர் அரைசதம்; இங்கிலாந்துக்கு 331 ரன்கள் இலக்கு!

உயர்கல்வியில் சிறந்த தமிழ்நாடு: முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்!

2025-ல் மட்டும் 600-க்கும் அதிகமான பயங்கரவாதத் தாக்குதல்கள்! எங்கு தெரியுமா?

இந்தியாவுடனான நல்லுறவை டிரம்ப்பின் ஈகோ அழிக்கிறது? வரிவிதிப்புக்கு அமெரிக்க காங்கிரஸ் எதிர்ப்பு!

SCROLL FOR NEXT