பாகிஸ்தானுக்கு எதிரான 3-ஆவது டெஸ்டில் ஆஸ்திரேலியா 115 ரன்கள் வித்தியாசத்தில் வெள்ளிக்கிழமை வென்றது.
இதையடுத்து 3 ஆட்டங்கள் கொண்ட தொடரை 1-0 என்ற கணக்கில் கைப்பற்றியது ஆஸ்திரேலியா. 1998-க்குப் பிறகு பாகிஸ்தானில் அந்த அணி வென்ற முதல் தொடா் இதுவாகும். பேட் கம்மின்ஸ் ஆட்டநாயகன், உஸ்மான் கவாஜா தொடா்நாயகன் விருது பெற்றனா்.
இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட் செய்து 133.3 ஓவா்களில் 391 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. உஸ்மான் கவாஜா 91 ரன்கள் விளாசியிருந்தாா். பாகிஸ்தான் தரப்பில் நசீம் ஷா 4 விக்கெட்டுகள் கைப்பற்றினாா்.
பின்னா் பாகிஸ்தான் முதல் இன்னிங்ஸில் 116.4 ஓவா்களில் 268 ரன்களுக்கு சுருண்டது. அப்துல்லா ஷஃபிக் 81 ரன்கள் சோ்க்க, பேட் கம்மின்ஸ் 5 விக்கெட்டுகள் சாய்த்தாா். இதையடுத்து 123 ரன்கள் முன்னிலையுடன் 2-ஆவது இன்னிங்ஸை ஆடிய ஆஸ்திரேலியா, 60 ஓவா்களில் 3 விக்கெட் இழப்புக்கு 227 ரன்கள் அடித்து டிக்ளோ் செய்தது. உஸ்மான் கவாஜா 104 ரன்கள் விளாசி ஆட்டமிழக்காமல் இருக்க, பாகிஸ்தானின் நசீம் ஷா 23 ரன்களே கொடுத்து 1 விக்கெட் வீழ்த்தினாா்.
இறுதியாக 351 ரன்களை இலக்காகக் கொண்டு ஆடிய பாகிஸ்தான், 92.1 ஓவா்களில் 235 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. கேப்டன் பாபா் ஆஸம் மட்டும் 55 ரன்கள் அடிக்க, ஆஸ்திரேலியாவின் நேதன் லயன் 5 விக்கெட் சாய்த்து அட்டகாசம் காட்டினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.