செய்திகள்

பொலார்ட் ஓய்வு பெற்றதால் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்குப் புதிய கேப்டன் தேர்வு

DIN

மேற்கிந்தியத் தீவுகள் அணியின் ஒருநாள், டி20 கேப்டனாக நிகோலஸ் பூரன் நியமிக்கப்பட்டுள்ளார்.

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாகச் சமீபத்தில் அறிவித்தார் 34 வயது ஆல்ரவுண்டர் பொலார்ட். அவர் மே.இ. தீவுகளின் ஒருநாள், டி20 கிரிக்கெட்டின் கேப்டனாகவும் இருந்தார். இதனால் புதிய கேப்டனைத் தேர்வு செய்யவேண்டிய நிலைமை ஏற்பட்டது.

இதையடுத்து மேற்கிந்தியத் தீவுகள் அணியின் ஒருநாள், டி20 கேப்டனாக நிகோலஸ் பூரன் நியமிக்கப்பட்டுள்ளதாக மே.இ. தீவுகள் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. ஷாய் ஹோப், துணை கேப்டனாகச் செயல்படுவார். 

கடந்த வருடம் துணை கேப்டனாக இருந்த நிகோலஸ் பூரன், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரில் கேப்டனாகச் செயல்பட்டு 4-1 என வெற்றியை அடைந்தார். மே.இ. தீவுகள் அணியின் கேப்டனாக 8 டி20, 2 ஒருநாள் ஆட்டங்களில் கேப்டனாக இருந்து ஆறு ஆட்டங்களில் வெற்றி பெற்றுள்ளார். இதனால் பொலார்டுக்கு அடுத்ததாக கேப்டன் பதவியை வகிப்பதற்கு பூரனைத் தேர்வு செய்வது இயல்பான முடிவாக அமைந்துள்ளது. 

2016-ல் டி20 கிரிக்கெட்டுக்கு அறிமுகமான பூரன், இதுவரை 94 வெள்ளைப் பந்து சர்வதேச ஆட்டங்களில் விளையாடி 3300 ரன்களுக்கு மேல் எடுத்துள்ளார். 

மேற்கிந்தியத் தீவுகள் அணி அடுத்ததாக நெதர்லாந்துக்கு எதிராக 3 ஒருநாள் ஆட்டங்களில் மே 31 முதல் விளையாடவுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஊழலை துடைத்தெறிய உறுதி: ஜாா்க்கண்ட் பிரசாரத்தில் பிரதமா் மோடி

பிரஜ்வல் ரேவண்ணா விவகாரம் தெரிந்தும் ஓராண்டாக நடவடிக்கை இல்லை: காங்கிரஸ் மீது நிா்மலா சீதாராமன் குற்றச்சாட்டு

சந்தேஷ்காளி சம்பவம் பாஜகவின் திட்டமிட்ட சதி: திரிணமூல் காங்கிரஸ் குற்றச்சாட்டு

அமெரிக்கா: 17 பேரைக் கொன்ற செவிலிக்கு 760 ஆண்டுகள் சிறை

வெங்காய ஏற்றுமதிக்கான தடை நீக்கம்: மத்திய அரசு நடவடிக்கை

SCROLL FOR NEXT