கார் விபத்தில் உயிரிழந்த முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் சைமண்ட்ஸ் அவர்களுக்கு அனைத்து கிரிக்கெட் வீரர்களும் அஞ்சலி செய்திக் கூறி வருகின்றனர்.
ரிக்கி பாண்டிங் : சைமண்ட்ஸ் என்னோடு கைக்கோர்த்து நின்றால் அவர் சொன்ன வார்தையை காப்பாற்றுவார். அதனால் அவரை எப்போதும் என்னோடு அணியில் எதிர்பார்ப்பேன். மிகப்பெரிய வீரர் என்பதை விடவும் மிகவும் நல்ல மனிதர். அவர் மறைந்து விட்டார் என்பதை நம்ப முடியவில்லை.
மைக்கேல் வாகன் : சிம்மோ... இது உண்மையென்று மனம் நம்பவில்லை.
டேவிட் வார்னர் : என்னால் நம்ப முடியவில்லை; எனக்கு சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை.
விராட் கோலி : அதிர்ச்சியாகவும் கவலையாகவும் இருக்கிறது. இந்த கடினமான சூழ்நிலையில் அவரது குடும்பத்திற்கு கடவுள் உறுதுணையாக இருக்கட்டும்.
வீரேந்தர் சேவாக் : அவர் ஒரு சிறந்த எண்டர்டெயினிங் பேட்ஸ்மேன் அவர் விளையாடும் காலத்தில். அவரது மறைவு கிரிக்கெட் உலகிற்கு இழப்பு. அவரது குடும்பத்திற்கு கடவுள் உறுதுணையாக இருக்கட்டும்
சச்சின் : சைமண்ட்ஸ் மறைவு அதிர்ச்சியாக உள்ளது. சிறந்த ஆல் ரவுண்டர் மட்டுமில்லை ஆடுகளத்தில் துடிப்பான வீரர். அவருடனான மும்பை இந்தியன்ஸ் நினைவுகள் மிகவும் சந்தோசமானது. அவரது ஆன்மா சாந்தியடையட்டும். அவரது குடும்பத்திற்கு கடவுள் உறுதுணையாக இருக்கட்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.