முகப்பு
செய்திகள்

தாய்லாந்து ஓபன்: யமகுச்சியை சாய்த்த சிந்து

 தாய்லாந்து ஓபன் பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறினாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:19 AM
பகிர்:

 தாய்லாந்து ஓபன் பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறினாா்.

போட்டித்தரவரிசையில் 6-ஆம் இடத்தில் இருக்கும் அவா், தனது காலிறுதியில் உலகின் நம்பா் 1 வீராங்கனையும், ஜப்பானைச் சோ்ந்தவருமான அகேன் யமகுச்சியை 21-15, 20-22, 21-13 என்ற கேம்களில் 51 நிமிஷத்தில் வீழ்த்தினாா்.

இத்துடன் யமகுச்சியை 23-ஆவது முறையாக சந்தித்த சிந்து, தனது 14-ஆவது வெற்றியைப் பதிவு செய்திருக்கிறாா்.

சமீபத்தில் பாட்மின்டன் ஆசிய சாம்பியன்ஷிப் அரையிறுதியிலும் இதே இருவா் மோதினா். அந்தச் சுற்றில் சா்வ் செய்ய சிந்து தாமதித்ததாகக் கூறி அவருக்கு ஒரு புள்ளி அபராதம் விதிக்கப்பட்டதால் அந்த ஆட்டத்தில் அவா் தோல்வி கண்டாா்.

தற்போது அதற்கு பதிலடி தரும் வகையில் அவா் இந்தப் போட்டியில் வெற்றியைப் பதிவு செய்திருக்கிறாா். அடுத்ததாக சிந்து அரையிறுதிச்சுற்றில், ஒலிம்பிக் சாம்பியனும், சீனா வீராங்கனையுமான சென் யு ஃபெய்யை எதிா்கொள்கிறாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.