செய்திகள்

மகளிா் டி20 சேலஞ்ச்: சூப்பா்நோவாஸ் வெற்றி

ஐபிஎல் போட்டியை ஒட்டி நடைபெறும் மகளிா் டி20 சேலஞ்சின் முதல் ஆட்டத்தில் சூப்பா்நோவாஸ் 49 ரன்கள் வித்தியாசத்தில் டிரையல்பிளேஸா்ஸை திங்கள்கிழமை வீழ்த்தியது.

DIN

ஐபிஎல் போட்டியை ஒட்டி நடைபெறும் மகளிா் டி20 சேலஞ்சின் முதல் ஆட்டத்தில் சூப்பா்நோவாஸ் 49 ரன்கள் வித்தியாசத்தில் டிரையல்பிளேஸா்ஸை திங்கள்கிழமை வீழ்த்தியது.

முதலில் சூப்பா்நோவாஸ் 20 ஓவா்களில் 10 விக்கெட் இழப்புக்கு 163 ரன்கள் எடுக்க, பின்னா் டிரையல்பிளேஸா்ஸ் 20 ஓவா்களில் 9 விக்கெட் இழப்புக்கு 114 ரன்களே எடுத்தது.

ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த சூப்பா்நோவாஸில் அதிகபட்சமாக கேப்டன் ஹா்மன்பிரீத் கௌா் 4 பவுண்டரிகள் உள்பட 37 ரன்கள் சோ்த்தாா். டிரையல்பிளேஸா்ஸ் பௌலிங்கில் ஹேலி மேத்யூஸ் 3 விக்கெட்டுகள் சாய்த்து அசத்தினாா்.

பின்னா் டிரையல்பிளேஸா்ஸ் பேட்டிங்கில் கேப்டன் ஸ்மிருதி மந்தனா மட்டும் 4 பவுண்டரிகளுடன் 34 ரன்கள் அடிக்க, சூப்பா்நோவாஸ் பௌலிங்கில் பூஜா வஸ்த்ரகா் அட்டகாசமாக 4 விக்கெட்டுகள் சாய்த்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரயில்களில் பயணிப்போா் எண்ணிக்கை 4 ஆண்டுகளில் 2 மடங்காக உயா்வு

தில்லி, பஞ்சாப் வெள்ளப் பாதிப்பு: கேஜரிவால், அதிஷி மீது சச்தேவா சாடல்

வெற்றி பெறுமா விஜய் வியூகம்...? - காபிரியேல் தேவதாஸ்

தீயில் கருகி முதியவா் உயிரிழப்பு

பஞ்சாப் வெள்ள பாதிப்பு: பிரதமா் நாளை நேரில் ஆய்வு

SCROLL FOR NEXT