செய்திகள்

டி20 உலகக் கோப்பை: பிரபல பாகிஸ்தான் வீரர் விலகல்!

டி20 உலகக் கோப்பைப் போட்டியிலிருந்து பிரபல பாகிஸ்தான் வீரர் ஃபகார் ஸமான் விலகியுள்ளார்.

DIN

டி20 உலகக் கோப்பைப் போட்டியிலிருந்து பிரபல பாகிஸ்தான் வீரர் ஃபகார் ஸமான் விலகியுள்ளார்.

முழங்கால் காயத்துடன் டி20 உலகக் கோப்பையில் விளையாட வந்த ஃபகார் ஸமானுக்குக் காயம் மேலும் தீவிரமடைந்ததால் தற்போது போட்டியிலிருந்து விலகியுள்ளார். இதையடுத்து மாற்று வீரராக உள்ள முகமது ஹாரிஸ், பாகிஸ்தானின் பிரதான அணியில் இடம்பிடித்துள்ளார்.

இந்தியா, ஜிம்பாப்வே அணிகளுக்கு எதிரான ஆட்டத்தில் ஃபகார் ஸமான் விளையாடவில்லை. ஆரம்பத்தில் 15 பேர் கொண்ட அணியில் ஃபகார் ஸமானுக்கு இடம் கிடைக்கவில்லை. இதன்பிறகு உஸ்மான் காதிருக்குக் காயம் ஏற்பட்டபோது அணியில் சேர்க்கப்பட்டார். நெதர்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் விளையாடிய ஃபகார் ஸமான், 16 பந்துகளில் 20 ரன்கள் எடுத்தார். அந்த ஆட்டத்தில் காயம் மேலும் மோசமானதால் தற்போது உலகக் கோப்பைப் போட்டியிலிருந்து விலகியுள்ளார். 

சூப்பர் 12 சுற்றில் தென்னாப்பிரிக்கா, வங்கதேச அணிகளுக்கு எதிராக பாகிஸ்தான் விளையாடவுள்ளது.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உலகக் கோப்பைத் தொடரிலிருந்து இலங்கை வேகப் பந்துவீச்சாளர் விலகல்; மாற்று வீரர் அறிவிப்பு!

சூடானில் வாகனங்கள் மீது ட்ரோன் தாக்குதல்கள்: 8 குழந்தைகள் உள்பட 24 பேர் பலி!

இந்தியாவை உலகுடன் இணைக்கும் தமிழ் மொழி: மலேசியாவில் பிரதமர் மோடி

மாரியம்மன் திருக்கோயில் திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா - புகைப்படங்கள்

ஹெட்மேயர் அரைசதம் விளாசல்; ஸ்காட்லாந்துக்கு 183 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT