செய்திகள்

ஆஸி. அணி வெளியேறுமா?: இங்கிலாந்துக்கு எதிராக இலங்கை முதலில் பேட்டிங்

இங்கிலாந்துக்கு எதிரான டி20 உலகக் கோப்பை ஆட்டத்தில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது.

DIN

இங்கிலாந்துக்கு எதிரான டி20 உலகக் கோப்பை ஆட்டத்தில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது.

சிட்னியில் நடைபெறும் ஆட்டத்தில் இலங்கை அணியில் கருணாரத்னே இடம்பெற்றுள்ளார். இங்கிலாந்து அணியில் மாற்றம் எதுவுமில்லை. இந்த ஆட்டத்தில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றால் அரையிறுதிக்கு முன்னேறும். இலங்கை அணி வெற்றி பெற்றால் ஆஸ்திரேலிய அணிக்கு அரையிறுதி வாய்ப்பு கிடைக்கும். 

4 ஆட்டங்களில் விளையாடியுள்ள இங்கிலாந்து அணி 5 புள்ளிகளுடன் 3-ம் இடத்திலும் 4 புள்ளிகளுடன் இலங்கை அணி 4-ம் இடத்திலும் உள்ளன. நியூசிலாந்து, ஆஸ்திரேலியா அணிகள் 7 புள்ளிகளுடன் முதல் இரு இடங்களில் உள்ளன. நியூசிலாந்து அணி அரையிறுதிக்குத் தகுதி பெற்றுவிட்டது. இன்றைய ஆட்டத்தில் இங்கிலாந்து வெற்றி பெற்றுவிட்டால் 7 புள்ளிகளுடன் நெட் ரன்ரேட் அடிப்படையில் அரையிறுதிக்கு முன்னேறும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தவெக 3-ஆம் ஆண்டு தொடக்க விழாவில் விஜய் பேச்சு! | Vijay full speech

ஓடிடியில் பராசக்தி எப்போது?

நாங்கள் வந்தவுடன் தில்லியே பயப்படுகிறது! - காவல்துறை மீது மமதா குற்றச்சாட்டு

கோவை: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் தற்கொலை

பிரபல பாலிவுட் இயக்குநர் வீட்டின் மீது துப்பாக்கி சூடு!

SCROLL FOR NEXT