செய்திகள்

ராகுல், சூர்யகுமார் அதிரடி: ஜிம்பாப்வேக்கு 187 ரன்கள் இலக்கு!

ஜிம்பாப்வே அணிக்கு அதிராக இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 186 ரன்களை குவித்தது. 

DIN

ஜிம்பாப்வே அணிக்கு அதிராக இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 186 ரன்களை குவித்தது. 

சூப்பர் 12 சுற்றின் கடைசி போட்டியில் ஜிம்பாப்வேக்கு எதிராக டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. 

இந்திய அணி நேரடியாக அரையிறுதிக்கு தேர்வாகியது. தற்போது இந்த போட்டியில் தோற்றாலும் இந்தியாவுக்கு பாதிப்பில்லை. இந்நிலையில் கேப்டன் ரோஹித் சர்மா டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளார். அணியில் ஒரு மாற்றம். தினேஷ் கார்த்திக் பதிலாக ரிஷப் பந்த் சேர்க்கப்பட்டுள்ளார். 

கே.எல்.ராகுல் மற்றும் சூர்யகுமார் யாதவ் அதிரடியாக விளையாடி இருவரும் அரைசதம் அடித்தனர். ராகுல் 35 பந்துகளில் 51 ரன்களும், சூர்யா 25 பந்துகளில் 57 ரன்களை எடுத்தார். இதில் 6 பவுண்டரிகள், 4 சிக்ஸர்கள் அடங்கும். ரோஹித் 15 ரன்கள், கோலி 26 ரன்கள், ரிஷப் பந்த் 3 ரன்கள், ஹார்திக் பாண்டியா 18 ரன்களும் எடுத்தனர். 

20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 186 ரன்கள் எடுத்தது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதிய பொறுப்பு காத்திருக்கிறது இவர்களுக்கு: தினப்பலன்கள்!

பாலியல் தொல்லையால் பாா்வையற்றோா் பள்ளி மாணவி மரணமா?

அமெரிக்க வரி எதிரொலி: ஏற்றுமதி ரக இறால் உள்ளூரில் விற்பனை தொடக்கம்

வாய்க்காலில் விழுந்து மதுபானக் கடை மேற்பாா்வையாளா் உயிரிழப்பு

காதல் விவகாரத்தில் இளைஞா் கொலை: 5 போ் கைது!

SCROLL FOR NEXT