செய்திகள்

71 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி: அரையிறுதியில் யாருடன் மோதுகிறது தெரியுமா? 

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டியில் 71 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. 

DIN

கே.எல்.ராகுல் மற்றும் சூர்யகுமார் யாதவ் அதிரடியாக விளையாடி இருவரும் அரைசதம் அடித்தனர். ராகுல் 35 பந்துகளில் 51 ரன்களும், சூர்யா 25 பந்துகளில் 57 ரன்களை எடுத்தார்.

இந்திய அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 186 ரன்கள் எடுத்தது. 

அடுத்து ஆடிய ஜிம்பாப்வே அணி 17.2 ஓவர்களுக்கு மொத்த விக்கெட்டுகளையும் இழந்து 115 ரன்களை மட்டுமே எடுத்தது. இதில் அதிகபட்சமாக சிக்கந்தர் ராஜா 34 ரன்களும், ரெய்ன் புருல் 35 ரன்களும் எடுத்தனர். இந்திய அணி சார்பில் அஸ்வின் 3 விக்கெட்டுகளும், ஹார்திக், ஷமி தலா 2 விக்கெட்டுகள் எடுத்தனர். 

சூர்யகுமார் யாதவ் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். 

அரையிறுதி போட்டிக்கான் விவரங்கள்: 

நவம்பர்-9: நியூசிலாந்து - பாகிஸ்தான். சிட்னி மைதானத்தில் விளையாட உள்ளது. இந்திய நேரப்படி மதியம் 1.30 மணி. 

நவம்பர்-10: இந்தியா - இங்கிலாந்து. அடிலெய்டு மைதானத்தில் விளையாட உள்ளது. இந்திய நேரப்படி மதியம் 1.30 மணி. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மோடியின் கைப்பாவையாக மாறிய தேர்தல் ஆணையம்: கார்கே குற்றச்சாட்டு!

டிஐஜி வருண் குமாருக்கு எதிராக அவதூறு கருத்து தெரிவிக்க சீமானுக்கு இடைக் காலத் தடை!

அமர்நாத் யாத்திரை செல்ல நாளைமுதல் அனுமதியில்லை! காஷ்மீர் நிர்வாகம் அறிவிப்பு

ஏ சான்றிதழ் பெற்ற ரஜினி திரைப்படங்கள்!

எங்கள் கூட்டணியிலிருந்து எந்த கட்சியும் வெளியேறாது: அமைச்சர் கே.என்.நேரு

SCROLL FOR NEXT