செய்திகள்

கிண்டல் செய்த ரசிகர்: ரிஷப் பந்த் தந்த பதிலடி!

நடிகை ஊர்வசியின் பெயரை முன்வைத்துத் தன்னைக் கிண்டல் செய்த ரசிகருக்குப் பதிலடி தந்துள்ளார் ரிஷப் பந்த்.

DIN

நடிகை ஊர்வசியின் பெயரை முன்வைத்துத் தன்னைக் கிண்டல் செய்த ரசிகருக்குப் பதிலடி தந்துள்ளார் ரிஷப் பந்த்.

பிரபல கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்தும் தானும் காதலிப்பதாக நடிகை ஊர்வசி ரெளடேலா முன்பு சூசகமாகத் தெரிவித்திருந்தார். இதனை மறுத்த ரிஷப் பந்த், சமூகவலைத்தளங்களில் ஊர்வசியை பிளாக் செய்தார். எனினும் இருவருக்கும் இடையிலான மோதல் இன்னும் தொடர்ந்து வருகிறது. 

இந்நிலையில் டி20 உலகக் கோப்பைப் போட்டியின் சூப்பர் 12 சுற்று இறுதி ஆட்டதில் ஜிம்பாப்வே அணியை வீழ்த்தியது இந்தியா. இந்த ஆட்டத்தின்போது மைதானத்தில் எல்லைக்கோட்டின் அருகே சென்று கொண்டிருந்த ரிஷப் பந்தை இந்திய ரசிகர் ஒருவர், ஊர்வசி விவகாரத்தை முன்வைத்துக் கிண்டல் செய்தார். அண்ணா ஊர்வசி கூப்டறாங்க என சத்தமாக ரிஷப் பந்த் காதில் விழும்படி கூறினார். இதற்கு உடனடியாகப் பதிலளித்த ரிஷப் பந்த், அப்ப போய் என்னன்னு கேளு என்றார். 

கிரிக்கெட் வீரரிடம் அநாகரிகமாக நடந்துகொண்ட ரசிகருக்குப் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளார்கள். மேலும் ரசிகரின் கிண்டலைக் கண்டுகொள்ளாமல் இருப்பதற்குப் பதிலாக அதே இடத்தில் பதிலடி தந்த ரிஷப் பந்துக்கு ரசிகர்கள் பலரும் பாராட்டு தெரிவித்துள்ளார்கள். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உருவ கேலிக்கு உள்ளான ஸ்மிருதி மந்தனாவின் புதிய புகைப்படங்கள்!

கலித் ரஹ்மான் இயக்கத்தில் மம்மூட்டி!

ஹரியாணாவில் மிதமான நிலநடுக்கம்

”நெல்லைக்கென 3 Special அறிவிப்புகள்! சொல்லவா?” முதல்வர் மு.க. ஸ்டாலின்

நீக்கப்பட்ட வாக்காளர்கள் பெயரைச் சேர்க்க... 12 ஆவணங்கள் எவை?

SCROLL FOR NEXT