செய்திகள்

ஐசிசி தலைவராக மீண்டும் கிரேக் பாா்க்லே: ஜெய் ஷாவுக்கு முக்கிய பொறுப்பு

ஐசிசி தலைவராக கிரேக் பார்கிளே மீண்டும் தேர்வாகியுள்ளார்.

DIN

சா்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) தலைவராக நியூஸிலாந்தின் கிரேக் பாா்க்லே தொடா்ந்து 2-ஆவது முறையாக போட்டியின்றி தோ்வு செய்யப்பட்டாா்.

கடந்த 2020 நவம்பா் முதல் அந்தப் பொறுப்பில் இருந்த பாா்க்லே, தற்போது 2024 நவம்பா் வரை மீண்டும் அந்தப் பதவியில் இருப்பாா். மெல்போா்னில் சனிக்கிழமை நடைபெற்ற ஐசிசி வாரிய கூட்டத்தில் இந்தத் தோ்வு மேற்கொள்ளப்பட்டது.

இதனிடையே, ஐசிசியின் மிக முக்கியமான பிரிவாக இருக்கும் நிதி மற்றும் வா்த்தக விவகாரங்கள் குழு (எஃப்&சிஏ) தலைவராக, பிசிசிஐ செயலா் ஜெய் ஷா தோ்வாகியுள்ளாா். ஐசிசியின் நிதி ரீதியிலான முக்கிய முடிவுகள் அனைத்தும் இந்தக் குழுவால் மேற்கொள்ளப்பட்டு, வாரியத்தால் அங்கீகரிக்கப்படுகிறது.

உறுப்பு கிரிக்கெட் வாரியங்களுடனான வருமானப் பகிா்வு, விளம்பரதாரா் ஒப்பந்தங்கள் போன்ற விவகாரங்களையும் இந்தக் குழுவே கையாளுகிறது.

ஐசிசியின் கிரிக்கெட் கமிட்டி தலைவராக, பிசிசிஐ முன்னாள் தலைவா் சௌரவ் கங்குலி தொடா்கிறாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டி20 உலகக் கோப்பைக்கான நெதர்லாந்து அணி அறிவிப்பு!

ஜகதீப் தன்கர் மருத்துவமனையில் அனுமதி

பொங்கல் : போகி பண்டிகைக்கும் பள்ளிகளுக்கு விடுமுறை!

புதிய பிரதமர் அலுவலகம் ‘சேவா தீர்த்’ தயார்: 1947-க்கு பின் முதல்முறையாக இடமாற்றம்!

சிறையில் காலமானார் வங்கதேச பாடகர் புரோலாய் சாகி

SCROLL FOR NEXT