செய்திகள்

உலகக் கோப்பை கால்பந்து: ஜெர்மனியை வீழ்த்திய ஜப்பான்

உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் இன்றைய லீக் ஆட்டத்தில் ஜெர்மனியை ஜப்பான் வீழ்த்தி ஆச்சர்யம் அளித்துள்ளது.

DIN

உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் இன்றைய லீக் ஆட்டத்தில் ஜெர்மனியை ஜப்பான் வீழ்த்தி ஆச்சர்யம் அளித்துள்ளது.

கத்தாரில் 22-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி ஞாயிற்றுக்கிழமை கோலாகலமாகத் தொடங்கியது. லீக் சுற்றில் 4 ஆட்டங்கள் நடைபெற்றன. 

இதில் ஜெர்மனி ஜப்பான் அணிகளுக்கிடையே போட்டி கலீஃபா சர்வதேச மைதானத்தில் நடைபெற்றது. இதில் ஜப்பான் அணி ஜெர்மனியை வீழ்த்தியது.

மிகுந்த பரபரப்புடன் நடந்த இந்தப் போட்டியில் ஆட்டத்தின் 32ஆவது நிமிடத்தில் கிடைத்த பெனால்ட்டி வாய்ப்பில் ஜெர்மனி தனது முதல் கோலை பதிவு செய்தது. அதனைத் தொடர்ந்து சூடுபிடித்த ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் தீவிரமாக விளையாடிய ஜப்பான் அடுத்தடுத்து 2 கோல்களை அடித்து ஆச்சர்யம் அளித்தது.

இறுதியில் ஜப்பான் 2க்கு 1 என்ற கோல் கணக்கில் ஜெர்மனியை வீழ்த்தியது. 
நேற்றைய ஆட்டத்தில் ஆர்ஜென்டீனாவுக்கு சவுதி அரேபியா அதிர்ச்சியளித்து வெற்றி பெற்ற நிலையில் இன்றைய ஆட்டத்தில் ஜப்பான் வென்றது உலகக் கோப்பை போட்டியை சூடிபிடிக்கச் செய்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

செல்வ விநாயகா் கோயில் கும்பாபிஷேகம்

முதலமைச்சா் கோப்பைக்கான கிரிக்கெட் போட்டி தொடக்கம்

கடகத்துக்கு யோகம்.. தினப்பலன்கள்!

சத்தீஸ்கா் மழை வெள்ளம்: திருப்பத்தூரைச் சோ்ந்த ஒரே குடும்பத்தினா் 4 போ் உயிரிழப்பு

வேன் மோதி இளைஞா் மரணம்

SCROLL FOR NEXT