செய்திகள்

இந்திய டி20 அணிக்கு வேறொரு பயிற்சியாளரைப் பரிந்துரைக்கும் ஹர்பஜன்

ராகுல் மீது எனக்கு மரியாதை உண்டு. டி20 கிரிக்கெட் பற்றி ராகுல் டிராவிடை விடவும்...

DIN


இந்திய டி20 அணிக்கு நெஹ்ராவையும் பயிற்சியாளராக நியமிக்க வேண்டும் என முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் கூறியுள்ளார்.

சமீபத்தில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பையில் இந்திய அணி அரையிறுதியில் தோல்வியடைந்தது. இதையடுத்து புதிய தேர்வுக்குழுவை நியமிக்கவுள்ளது பிசிசிஐ.

இந்நிலையில் இந்திய டி20 அணி பற்றி முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

டி20 கிரிக்கெட்டில் நெஹ்ரா போன்ற ஒருவர் பயிற்சியாளராக இருக்கவேண்டும். அவர் சமீபத்தில்தான் ஓய்வு பெற்றார். ராகுல் மீது எனக்கு மரியாதை உண்டு. டி20 கிரிக்கெட் பற்றி ராகுல் டிராவிடை விடவும் நெஹ்ராவுக்கு அதிகம் தெரியும். டி20 கிரிக்கெட்டில் சமீபத்தில் விளையாடிய ஒருவர் பயிற்சியாளர் பதவிக்குப் பொருத்தமாக இருப்பார். அதற்காக டிராவிடை நீக்க வேண்டும் என நான் கூறவில்லை. டிராவிடும் நெஹ்ராவும் இணைந்து 2024 டி20 உலகக் கோப்பைப் போட்டிக்கான இந்திய அணியை உருவாக்கலாம் என்றார்.

2013-ல் தனது கடைசி டி20 ஆட்டத்தை விளையாடினார் டிராவிட். நெஹ்ரா 2017-ல். 2022 ஐபிஎல் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற குஜராத் அணியின் பயிற்சியாளராக நெஹ்ரா பணியாற்றினார்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜம்முவிலிருந்து பழங்கள் எடுத்துச் செல்வது கடுமையாக பாதிப்பு: ‘சரக்கு ரயில் சேவை அவசியம்!’ -மெஹபூபா முஃப்தி

விவசாயிகளுக்கு திமுக அரசால் துரோகம்: எடப்பாடி பழனிசாமி

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 8 காசுகள் சரிந்து ரூ.88.18 ஆக நிறைவு!

ஐபோன் 17 - எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யுமா? புது அம்சங்கள் என்னென்ன?

மராத்தா சமூகத்துக்கு இடஒதுக்கீடு கோரி நீடித்த உண்ணாவிரதப் போராட்டம் முடிவு!

SCROLL FOR NEXT