உலகக் கோப்பையின் போது ஆஸ்திரேலியாவின் மிட்செல் டியூக் பந்தை கட்டுப்படுத்துகிறார். 
செய்திகள்

உலகக் கோப்பை: டென்மார்க்கை வீழ்த்தியது ஆஸ்திரேலியா! 

குரூப் டி பிரிவில் ஆஸ்திரேலிய அணி 4 புள்ளிகளுடனும் டென்மார்க் 2 புள்ளிகளுடனும் களத்தில் மோதியது. 

DIN

கத்தாரில் நடைபெற்றுவரும் கால்பந்து உலகக் கோப்பை போடியில் குரூப் டி பிரிவில் அடுத்த சுற்றுக்கு ஏற்கனவே பிரான்ஸ் தேர்வான நிலையில் ஆஸ்திரேலியா- டென்மார்க் இடையே கடும் பலப்பரிடச்சை நடந்தது.

ஆஸ்திரேலிய அணி 4 புள்ளிகளுடனும் டென்மார்க் 2 புள்ளிகளுடனும் களத்தில் மோதியது. 

டென்மார்க அடுத்த சுற்றுக்கு தேர்வாக துனிசியா தோற்க வேண்டும், ஆஸ்திரேலியாவும் தோற்க வேண்டும். எனவே மிக முக்கியமான போட்டி என்பதால் சுவாரசியமாக இருந்தது. 

முதல் பாதியில் இரு அணிகளும் கோலடிக்காத நிலையில் இரண்டாம் பாதியில் ஆஸ்திரேலிய அணி 60வது நிமிடத்தில் கோல் அடித்தது. ஆட்டத்தின் முடிவில் 1-0 என டென்மார்க்கை வீழ்த்தி நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெற்றது. 

குரூப் டி பிரிவில் பிரான்ஸ், ஆஸ்திரேலிய அணிகள் அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிரதமர் நரேந்திர மோடியாக நடிக்கும் உன்னி முகுந்தன்!

இந்திய டெஸ்ட்: மே.இ.தீவுகள் அணி அறிவிப்பு! முன்னாள் கேப்டன் பிராத்வெயிட் நீக்கம்!

தில்லியில் அமித் ஷாவை சந்தித்தது ஏன்? இபிஎஸ் விளக்கம்!

பெரியாரின் போராட்டங்கள் பல தலைமுறையாக வழிகாட்டுகிறது! தமிழில் பதிவிட்ட பினராயி விஜயன்!

பிரதமர் மோடி பிறந்தநாள்: தலைவர்கள் வாழ்த்து!

SCROLL FOR NEXT