செய்திகள்

தெ.ஆ. ஒருநாள் தொடர்: சஹாருக்குப் பதிலாக தமிழக வீரர் தேர்வு

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து வேகப்பந்து வீச்சாளர் தீபக் சஹார் விலகியுள்ளார். 

DIN


தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து வேகப்பந்து வீச்சாளர் தீபக் சஹார் விலகியுள்ளார். 

இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்து 3 டி20, 3 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடுகிறது தென்னாப்பிரிக்க அணி. டி20 தொடரை 2-1 என இந்தியா வென்றது. ஒருநாள் தொடரின் முதல் ஆட்டம் லக்னெளவில் நடைபெற்றது. இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் ஆட்டத்தை 9 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது தென்னாப்பிரிக்க அணி. 2-வது ஆட்டம், ராஞ்சியில் நாளை நடைபெறவுள்ளது. 

இந்நிலையில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் தீபக் சஹார், முதுகு வலி காரணமாக ஒருநாள் தொடரிலிருந்து விலகியுள்ளார். இதையடுத்து சஹாருக்குப் பதிலாக தமிழக ஆல்ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் இந்திய அணிக்குத் தேர்வாகியுள்ளார். தீபக் சஹார் பெங்களூரில் உள்ள நேஷனல் கிரிக்கெட் அகாதெமிக்குச் சென்று மருத்துவச் சிகிச்சை பெறுவார் என்று பிசிசிஐ தகவல் தெரிவித்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பங்குச்சந்தை: சென்செக்ஸ் 300 புள்ளிகள் உயர்வு! லாபத்தில் உலோகம், ஐடி பங்குகள்!

நடுவானில் என்ஜின் செயலிழப்பு! தில்லியில் ஏர் இந்தியா விமானம் அவசர தரையிறக்கம்!

தங்கம் விலை உயர்வு: உச்சத்தில் வெள்ளி!

வடசென்னை அனல் மின் நிலையத்தில் 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு

திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு! கனிமொழி தலைமையில் ஆலோசனை!

SCROLL FOR NEXT