செய்திகள்

ஐசிசி சிறந்த வீராங்கனை விருதை வென்ற இந்திய கேப்டன்!

DIN

செப்டம்பர் மாதத்துக்கான ஐசிசி சிறந்த வீராங்கனையாக இந்திய அணி கேப்டன் ஹர்மன்ப்ரீத் கெளர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் சிறந்த வீராங்கனையாகத் தேர்வானார் ஹர்மன்ப்ரீத். ஒருநாள் தொடரில் 3 ஆட்டங்களில் 221 ரன்களை எடுத்தார். 1999-க்குப் பிறகு இங்கிலாந்தில் முதல்முறையாக ஒருநாள் தொடரை வென்றது இந்திய மகளிர் அணி. இதையடுத்து செப்டம்பர் மாதத்துக்கான ஐசிசி சிறந்த வீராங்கனையாக ஹர்மன்ப்ரீத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த விருதைப் பெறும் முதல் இந்திய வீராங்கனை என்கிற பெருமையையும் அவர் அடைந்துள்ளார். சக வீராங்கனை மந்தனா, வங்கதேச வீராங்கனை நிகர் சுல்தானை ஆகியோரைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு இந்த விருதை வென்றுள்ளார். 

33 வயது ஹர்மன்ப்ரீத் கெளர், இந்திய அணிக்காக 3 டெஸ்டுகள், 124 ஒருநாள், 135 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருடப்பட்டதா எலக்சன் திரைக்கதை? எழுத்தாளர் குற்றச்சாட்டு

சைத்ரா ரெட்டியின் தருணங்கள்!

ஐபிஎல் ஒளிபரப்பாளர்களை கடுமையாக விமர்சித்த ரோஹித் சர்மா!

தில்லி-கெய்ரோவை இணைக்கும் தினசரி விமான சேவையை முன்னெடுக்க எகிப்து ஏர் தீர்மானம்!

ஜுன் 4-ல் இந்தியா கூட்டணி ஆட்சியைக் கைப்பற்றும்: கேஜரிவால்

SCROLL FOR NEXT